ராகுலின் தோல்விக்கு காரணம் என்ன?... சிறப்பு குழு எற்பாடு!

உத்திரபிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் ராகுல் காந்தி படுதோல்வி அடைந்த நிலையில் அவரது தோல்விகான காரணம் குறித்து அறிய சிறப்பு குழு ஒன்றை அத்தொகுதிக்கு அனுப்பியுள்ளார் ராகுல்காந்தி!

Last Updated : May 30, 2019, 07:41 PM IST
ராகுலின் தோல்விக்கு காரணம் என்ன?... சிறப்பு குழு எற்பாடு! title=

உத்திரபிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் ராகுல் காந்தி படுதோல்வி அடைந்த நிலையில் அவரது தோல்விகான காரணம் குறித்து அறிய சிறப்பு குழு ஒன்றை அத்தொகுதிக்கு அனுப்பியுள்ளார் ராகுல்காந்தி!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற போதிலிலும் பாஜக 303 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்க உள்ளது. அதேவேளையில் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்தை பெறுவதிலும் சிக்கல் கண்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்ட அமோதி தொகுதியில் அவர் பாஜக-வின் ஸ்மிரித்தி இராணியிடன் தோல்வியடைந்தார். இது காங்கிரஸ் கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

1977-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அமோதி தொகுதியில் தோற்ற பின்னர் தற்போது 2019-ஆம் ஆண்டு அதே தொகுதியில் ராகுல் காந்தி தோற்று இன்னும் ஒரு மோசமான வரலாற்று பக்கத்தை காங்கிரஸ் கட்சிக்கு சேர்த்திருக்கின்றார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அமோதி தொகுதியில் தோற்றுப்போனதற்கான காரணங்களை அறிய ராகுல் சிறப்பு குழு ஒன்றை ஏற்பாடு செய்து அமோதி தொகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சிறப்பு குழுவில் ஜூபைர்கான், காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி பொறுப்பாளர் கே.எல் சர்மா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இருவரும் அமோதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர்.

கடந்த 2009-ஆம் ஆண்டு வரை கே.எல்.சர்மா அமோதி மக்களை தொகுதியின் பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் இவரது இடத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சந்திரகாந்த் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கே.எல் சர்மா சோனியாவின் ரேபரேலி தொகுதிக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News