இந்திய தபால் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்: 98000 காலியிடங்கள்

Indian Post Recruitment 2022: 98000 க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது இந்திய தபால் துறை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 18, 2022, 03:17 PM IST
  • 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்பு
  • இந்திய தபால் துறையில் பணியாற்றும் வாய்ப்பு
  • மொத்தம் 98003 காலியிடங்கள் நிரப்பப்படும்
இந்திய தபால் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்: 98000 காலியிடங்கள் title=

Indian Post Recruitment 2022: இந்திய தபால்துறை பெரிய அளவிலான வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு இயக்கத்தை அறிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தபால்காரர், அஞ்சல் காவலர்கள் மற்றும் பிற பணிகளுக்கு ஆளெடுக்கும் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் கொண்ட இந்திய குடிமக்களிடமிருந்து இந்தியா போஸ்ட் விண்ணப்பங்களை கோரியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியா போஸ்ட் இணையதளமான indiapost.gov.in இலிருந்து ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆட்சேர்ப்பு நடைமுறையில் மொத்தம் 98,083 பணியிடங்கள் நிரப்பப்படும்.

நாடு முழுவதும் 23 வட்டங்களில் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய அரசு அனுமதித்துள்ளதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தவிர, ஸ்டெனோகிராபர் தொடர்பான காலி பணியிடங்களும் இந்த ஆட்சேர்ப்பில் நிரப்பப்படும். ஆந்திராவில் 1166 எம்டிஎஸ் பணியிடங்களும், 108 அஞ்சல் காவலர் பணியிடங்களும், 2289 தபால்காரர் பணியிடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. தெலுங்கானா வட்டத்தின் கீழ் 1553 தபால்காரர்கள், 82 அஞ்சல் காவலர்கள் மற்றும் 878 எம்டிஎஸ் நியமிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | JOB Openings: ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் வேலை ரெடி

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2022: காலியிட விவரங்கள்
தபால்காரர்: 59099 பணிகள்
அஞ்சல் பாதுகாப்பு: 1445 பணிகள்
மல்டி டாஸ்கிங்(எம்டிஎஸ்): 37539 பணிகள்

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2022: தகுதி 
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் கணினி பற்றிய அடிப்படை புரிதல் பெற்றிருக்க வேண்டும். சில பணிகளுக்கு இடைநிலை அல்லது 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு பணிக்குமான தேவைகள் மாறுபடுவதால், விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதிகள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான செயல்முறையை சரிபார்க்க அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.  

மேலும் படிக்க | மத்திய ரிசர்வ் போலீஸில் 4300 காலிப்பணியிடங்கள்

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு வயது வரம்பு
இந்திய தபால் துறையில் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

இந்தியா போஸ்ட் வேலைகள் 2022: எப்படி விண்ணப்பிக்கும் செயல்முறை
துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapost.gov.in ஐப் பார்வையிடவும்.
முகப்புப் பக்கத்திற்குச் சென்று ஆட்சேர்ப்பு இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் நிலையைத் தேர்ந்தெடுத்து தேவைகளை மதிப்பாய்வு செய்யவும்
உங்கள் பெயரை பதிவு செய்யவும்.
படிவத்தை பூர்த்தி செய்யவும்.
பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து கட்டணம் செலுத்தவும்
ஒப்புகைப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, சேமித்து, எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்..

மேலும் படிக்க | 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News