வாழை விவசாயிகளை வாழ வைக்கும் அரசு! திசு வளர்ப்பு சாகுபடிக்கு ரூ.50000 மானியம்

Subsidy For Banana Farming: திசு வளர்ப்பு தொழில்நுட்பம் மூலம் வாழை சாகுபடிக்கு விவசாயிகள் செய்யும் செலவில் 50% மானியம் கிடைக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 19, 2023, 06:33 PM IST
  • வாழை சாகுபடிக்கு விவசாயிகளுக்கு 50% மானியம்
  • திசு வளர்ப்பு தொழில்நுட்பம் மூலம் வாழை சாகுபடி
  • 50 ஆயிரம் ரூபாய் வரை மானியம் தரும் பிகார் மாநில அரசு
வாழை விவசாயிகளை வாழ வைக்கும் அரசு! திசு வளர்ப்பு சாகுபடிக்கு ரூ.50000 மானியம் title=

Tissue Culture Banana Farming: விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. தோட்டக்கலை திட்டத்தின் கீழ் வாழை விவசாயத்திற்கு பிகார் மாநில அரசு ரூ.50,000 மானியம் வழங்குகிறது.இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பாரம்பரிய முறையை விட, 60 நாட்களுக்கு முன்னதாகவே வாழை தயாராகிவிடும் என்பதோடு மகசூலும் அதிகம் என்பது சிறப்பு ஆகும்.

திசு வளர்ப்பு தொழில் நுட்பத்தில் வாழை பயிரிட்டால், 60 நாட்களுக்கு முன்பே பயிர் தயாராகி விடும் என்பதுடன், 50% மானியம் கிடைக்கும். திசு வளர்ப்பு தொழில்நுட்பம் மூலம் வாழை சாகுபடிக்கு விவசாயிகள் செய்யும் செலவில் 50% மானியம் கிடைக்கும்.  

Tissue Culture

திசு வளர்ப்பு தொழில்நுட்பத்தில் வாழை சாகுபடி 
திசு வளர்ப்பு நுட்பத்தில், தாவர திசுக்களின் ஒரு சிறிய துண்டு அதன் வளரும் மேல் பகுதியில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த துண்டு ஜெல்லியில் வைக்கப்படுகிறது, இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாவர ஹார்மோன்கள் உள்ளன. இந்த ஹார்மோன்கள் தாவர திசுக்களில் உள்ள செல்களை வேகமாகப் பிரித்து பல செல்கள் உருவாகின்றன. இதன் காரணமாக, பொதுவான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதை விட செடியின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு அரசு மானியம்! வாழ வைக்கும் வாழைக்கு 40% மானியம்

20 ஹெக்டேரில் வாழை பயிரிட இலக்கு

தேசிய தோட்டக்கலை மிஷன் திட்டத்தின் கீழ், ஒரு மாவட்டத்திற்கு 20 ஹெக்டேரில் திசு வளர்ப்புத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாழை பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மாநில அரசின் தோட்டக்கலை இயக்ககத்தின் திசு வளர்ப்பு தொழில்நுட்ப இணையதளம் மூலம் வாழை சாகுபடிக்கு விண்ணப்பிக்கலாம்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், அரசின் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற சில ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்
விவசாயிகள் ஆதார் அட்டை, நில ஆவணங்கள், மொபைல் எண், வங்கி பாஸ்புக் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். விண்ணப்பம் சரிபார்த்த பிறகு, மானியத் தொகை கணக்கிற்கு அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் மாவட்ட தோட்டக்கலைத் துறையை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க | Dates Farming: தண்ணியே வேண்டாம்! மரம் வச்சா போதும், வருசத்துக்கு ரூ 20 லட்ச லாபம்

திசு வளர்ப்பு வாழை சாகுபடியின் நன்மைகள்

நோயில்லாத வாழைக்கன்றுகள்
வீரியத்துடன் வளரக் கூடிய கன்றுகள்
சீரான அறுவடை
அதிக மகசூல்
ஆண்டு முழுவதும் வாழைக்கன்றுகள் கிடைக்கும்.

அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப நடவுக் காலங்கள் இருந்த போதிலும், விவசாயிகள் திசு வளர்ப்பு வாழை கன்றுகளை வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். G9, செவ்வாழை, நேந்திரன் ஆகிய ரகங்கள் திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யபடுகின்றன.

ஒரு முறை வாழை காய்த்து முடிந்தவுடன் அதை வெட்டிவிட்டு, அதன் பக்க கன்று மூலம் அடுத்த வாழை உருவாகிறது. ஒரு வாழை வைத்தால், மூன்று முறை மகசூல் பெறலாம் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

மேலும் படிக்க | வைட்டமின் சி ஓவர்டோஸானால் ஏற்படும் நோய்கள்! சப்ளிமெண்ட்களை அளவா எடுத்துக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News