வெறும் ரூ.95 முதலீடு செய்தால் ரூ.14 லட்சம் கிடைக்கும்! முழு விவரம்!

சிறுசேமிப்பு சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர 19 வயது முதல் அதிகபட்சமாக 45 வயது வரை இருக்க வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Nov 13, 2022, 01:54 PM IST
  • காப்பீட்டு திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
  • அரசாங்கம் பல காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது.
  • போஸ்ட் ஆபிஸில் அதிக லாபம் தரும் காப்பீடு திட்டங்கள் உள்ளது.
வெறும் ரூ.95 முதலீடு செய்தால் ரூ.14 லட்சம் கிடைக்கும்! முழு விவரம்!  title=

உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை சம்பாதித்து தேவையானதை செய்துகொள்ளலாம், அதுவே வயதான பிறகு நம்மால் பெரிதாக சம்பாதிக்க முடியாது. அதனால் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும் வயதான காலத்தில் ஓய்வில் இருந்தபடி வருமானத்தை பெறவும் உதவுவது முதலீட்டு திட்டங்கள் தான்.  இளம் வயதிலேயே பாதுகாப்பான திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்துவிட்டால் எதிர்காலம் பற்றிய கவலை உங்களுக்கு இருக்காது, சிறந்த மற்றும் நம்பகத்தன்மையான முதலீட்டு திட்டங்களை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தபால் அலுவலகத்தின் சேமிப்பு திட்டம் உதவிகரமாக இருக்கும்.  தபால் அலுவலகம் வழங்கும் சிறுசேமிப்பு சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துகொள்ள விரும்பும் முதலீட்டாளர்களின் வயது குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சமாக 45 வயது வரை இருக்க வேண்டும் மற்றும் இது முழுக்க முழுக்க இந்தியக் குடிமக்களுக்கான சேமிப்பு திட்டமாகும்.  

மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ

சிறுசேமிப்பு சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.  முதலீட்டாளர் இறந்துவிட்டால் காப்பீட்டுத் தொகை குடும்ப உறுப்பினர், நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும்.  இந்த திட்டத்தில் இரண்டு வகையான முதிர்வு விருப்பங்கள் உள்ளது, முதல் விருப்பம் 15 ஆண்டு பாலிசி, இதில் உத்தரவாதத் தொகையில் 20 சதவீதம் 6, 9 மற்றும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை திரும்ப பெறலாம்.  இரண்டாவது விருப்பம் 20 வருட பாலிசி, இதில் 8, 12 மற்றும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் திரும்பப் பெறலாம்.

உதாரணமாக நீங்கள் 20 வயதில் ரூ.7 லட்சம் காப்பீட்டுத் தொகையுடன் 20 வருட பாலிசியை வாங்கும்போது, ​​தினசரி பிரீமியமாக ரூ.95 செலுத்த வேண்டும்.  மாதத்திற்கு ரூ.2850 வரும், அதுவே வருடத்திற்கு மொத்தம் ரூ.17,100 ஆகும்.  20 வருடங்கள் நீங்கள் இந்த தொகையை முதலீடு செய்து அந்த திட்டம் முதிர்ச்சி அடையும்போது உங்களுக்கு மொத்தமாக ரூ. 14 லட்சம் கிடைக்கும்.  அதன் பிறகு ஒவ்வொரு ரூ.1000க்கும் உங்களுக்கு ஆண்டு போனஸ் ரூ.48 வழங்கப்படுகிறது, மொத்த போனஸ் ரூ.6.72 லட்சமாக இருக்கும்.  இதன் விளைவாக கடன் முதிர்ச்சியடையும் போது உங்களுக்கு மொத்தம் ரூ. 9.52 லட்சம் கிடைக்கும்.

மேலும் படிக்க | வாட்ஸ்அப்பில் வீடியோ கால் பேசியதால் ரூ.1.57 லட்சத்தை இழந்த நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News