60 வயதுக்கு அதிகமானவரா? கவலை வேண்டாம்! சீனியர் சிட்டிசன்களுக்கும் லோன் வசதி உண்டு

Loan For Pensioners Is Possible: முதியோர்கள் தங்கள் வயதின் அடிப்படையில் கடன் கிடைக்காது என்று கவலைப்படுவார்கள், அவர்களுக்கும் கடன் கொடுக்க ஒரு வங்கி இருக்கு...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 20, 2023, 05:57 PM IST
  • ஓய்வூதியக் கடன் திட்டம்
  • கடனுக்கு வட்டி எவ்வளவு?
  • எஸ்பிஐயின் சிறப்பு கடன் திட்டம்
60 வயதுக்கு அதிகமானவரா? கவலை வேண்டாம்! சீனியர் சிட்டிசன்களுக்கும் லோன் வசதி உண்டு title=

புதுடெல்லி: ஓய்வூதியம் பெறுபவர்களும் கடன் பெற முடியுமா? இந்தத் திட்டம்- பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியக் கடன் திட்டம் (State Bank of India Pension Loan Scheme). இந்த திட்டத்தின் கீழ், ஓய்வூதியதாரர்கள் தங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய வங்கியில் கடன் பெறலாம். எந்தவொரு வங்கியும் தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வயது, வருமானம் மற்றும் நம்பகத்தன்மையை ஆராய்ந்த பின்னரே கடன் வழங்குகிறது.
 
ஓய்வூதியம் பெறுபவர்களும் கடன் பெற முடியுமா? முடியும் என்று சொல்கிறது பாரத ஸ்டேட் வங்கி. SBI ஓய்வூதியக் கடன் திட்டத்தின் கீழ் கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 72 மாதங்கள், வாங்கியக் கடனை 78 வயது வரை திருப்பிச் செலுத்தலாம்.

பல முதியோர்கள் தங்கள் வயதின் அடிப்படையில் கடன் கிடைக்காது என்று சொல்வதற்கு இதுவே காரணம். ஆனால் நீங்கள் ஓய்வு பெற்ற நபராக இருந்தால், ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுபவராகவும் இருந்தால் உங்களுக்கு கடன் வசதியை எஸ்பிஐ தயாராக இருக்கிறது. 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி: காத்திருக்கும் 2 பரிசுகள், அதிகரிக்கும் மாத ஊதியம்

எஸ்பிஐ ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு கடன் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஓய்வூதியதாரர்கள் கடினமான காலங்களில் வங்கியில் கடன் பெறலாம். கடன் தொகை என்பது ஓய்வூதிதாரரின் ஓய்வூதிய வருவாயின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.  

ஓய்வூதியக் கடனின் அம்சங்கள்
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கடன் என்பதால், கடனுக்கான செயலாக்க கட்டணம் மிகவும் குறைவு. கடனைப் பெறுவதற்கான செயல்முறையும் விரைவானது மற்றும் அதிக ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

ஓய்வூதியக் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதங்களும் பொதுவாக தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை விட குறைவாக இருக்கும். 

மேலும் படிக்க | EPF முக்கிய அப்டேட்: ஓய்வுக்கு முன்னரே பிஎஃப் தொகையை எடுக்க வேண்டுமா? அதற்கு இவை எல்லாம் அவசியம் 

இந்தக் கடனில் மறைமுகக் கட்டணங்கள் எதுவும் இல்லை. ஓய்வூதியம் பெறுபவர்கள் கடனை திருப்பிச் செலுத்த EMI விருப்பத்தைப் பெறுகிறார்கள். எந்தவொரு SBI கிளையிலும் நீங்கள் ஓய்வூதியக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஓய்வூதியக் கடனுக்கான நிபந்தனைகள்
ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் இந்தக் கடன் தனிநபர் கடன் போன்றது. இந்தக் கடனைப் பெற, கடன் வாங்குபவரின் ஓய்வூதியக் கணக்கு ஸ்டேட் பாங்கில் இருக்க வேண்டும் என்பது அடிப்படை நிபந்தனையாகும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 புத்தாண்டு பரிசுகள்: 2024 துவக்கத்திலேயே அதிரடி ஊதிய உயர்வு

எஸ்பிஐயிலிருந்து ஓய்வூதியக் கடனுக்கு விண்ணப்பிக்க, ஓய்வூதியதாரரின் வயது 76 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
ஓய்வூதியம் பெறுபவர், கடனின் காலத்தில், கருவூலத்திற்கு வழங்கப்பட்ட தங்கள் ஓய்வூதிய ஆணையைத் திருத்த மாட்டார்கள் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும்.

SBI இலிருந்து தடையில்லாச் சான்றிதழை வழங்கும் வரை, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத் தொகையை வேறு எந்த வங்கிக்கும் மாற்றுவதற்கான கோரிக்கைகளை கருவூலம் ஏற்றுக்கொள்ளாது என்று கடன் பெற்றவர் கருவூலத்தில் எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும்.

வாழ்க்கைத் துணை (குடும்ப ஓய்வூதியத்திற்குத் தகுதியானவர்) அல்லது பொருத்தமான மூன்றாம் தரப்பினரின் உத்தரவாதம் உட்பட திட்டத்தின் மற்ற அனைத்து விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 72 மாதங்கள், அதை 78 வயது வரை திருப்பிச் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | NPS சந்தாதாரர்களுக்கு நிம்மதி கொடுத்த PFRDA! ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News