பங்குச் சந்தையில் மீண்டும் வர்த்தகத்தை நிறுத்தியது ரிலையன்ஸ் கேபிட்டல்! காரணம் என்ன?

Reliance Capital Latest Update: அனில் அம்பானியின் இந்த நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி எடுத்த பெரிய முடிவு, கோடிக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2023, 05:33 PM IST
  • ரிலையன்ஸ் கேபிடல்ஸ் இனி அம்பானிக்கு இல்லை
  • அம்பானியின் திவாலான நிறுவனம்
  • இந்துஜா குழுமத்தில் ஐக்கியமாகும் அனில் அம்பானியின் நிறுவனம்
பங்குச் சந்தையில் மீண்டும் வர்த்தகத்தை நிறுத்தியது ரிலையன்ஸ் கேபிட்டல்! காரணம் என்ன? title=

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி எடுத்த பெரிய முடிவு, கோடிக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஒரு காலத்தில் அனில் அம்பானியின் வணிகத் துறையில் மிகவும் வெற்றிகரமான நிறுவனமாக இருந்த ரிலையன்ஸ் கேபிடல், இப்போது கடன் சுமையில் உள்ளது. இந்த நிதித்துறை நிறுவனம் தொடர்பாக ரிசர்வ் வங்கி (RBI) ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.

தொழிலதிபர் மற்றும் முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி. நிதித்துறையின் பெரிய நிறுவனம் பெரும் கடனில் சுமையாக உள்ளது. அதன் தீர்வுக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இப்போது இந்திய ரிசர்வ் வங்கி அதன் தீர்வுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரிலையன்ஸ் கேபிடல் ஒரு காலத்தில் நாட்டின் மிகப்பெரிய NBFC நிறுவனங்களில் ஒன்றாகவும், அனில் அம்பானியின் வணிகப் பிரிவில் மிகவும் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாகவும் இருந்தது.

ரிலையன்ஸ் கேபிட்டலின் கடன் சுமையை தீர்க்கும் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி இன்று (2023 நவம்பர் 18) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ரிலையன்ஸ் கேபிட்டலை கையகப்படுத்துவதற்கான தீர்மான திட்டத்தை சமர்ப்பித்திருந்த ஹிந்துஜா குழும நிறுவனமான IndusInd International Holdings Limited இனி ரிலயன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் முதலாளியாகிறது.

மேலும் படிக்க | டார்க் வெப்பில் உங்கள் தகவல்கள் இருக்கிறதா? நொடியில் ஸ்கேன் செய்து கொடுக்கும் கூகுள்

ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ்
இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 'ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை' (No Objection Certificate) நிறுவனம் பெற்றுள்ளதாக ரிலையன்ஸ் கேபிடல் நிர்வாகி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். நவம்பர் 17 ஆம் தேதியே இந்நிறுவனத்தின் தீர்வுத் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துவிட்ட்டது. இதன் மூலம், ஹிந்துஜா குழுமம் ரிலயன்ஸ் கேபிட்டலை கையகப்படுத்துவதற்கான இறுதிகட்டத்திறு வந்துவிட்டது. ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனம் ‘அசோக் லேலண்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய ஏலத்தை எடுத்த இந்துஜா குழுமம் 
ஹிந்துஜா குழும நிறுவனமான 'இண்டஸ்இண்ட் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் லிமிடெட்' ரிலையன்ஸ் கேபிட்டலை கையகப்படுத்துவதற்கான மிகப்பெரிய ஏலத்தில் கலந்துக் கொண்டது. ரிலையன்ஸ் கேபிட்டலை ரூ.9,650 கோடிக்கு வாங்க நிறுவனம் முன்வந்துள்ளது. ஏப்ரல் மாதம் ரிலையன்ஸ் கேபிட்டலுக்கான இரண்டாவது சுற்று ஏலம் நடைபெற்றது.

ரிலையன்ஸ் கேபிட்டலில் கடுமையான முறைகேடுகள் மற்றும் பணம் செலுத்தாததால், நிறுவனத்தின் நிர்வாகிகள் குழுவை 29 நவம்பர் 2021 அன்று ரிசர்வ் வங்கி நீக்கியது.  அதன்பிறகு நாகேஸ்வரராவ் என்பவரை நிறுவனத்தின் நிர்வாகியாக ஆர்பிஐ நியமித்தது.

மேலும் படிக்க | குற்றத்திற்கு உடந்தையாக இருந்த போலீஸார் மீது அதிரடி நடவடிக்கை! 22 பேர் காத்திருப்போர் பட்டியலில்!

தற்போது, ரிலையன்ஸ் கேபிடல்ஸ் இந்துஜா குழுமத்துடன் இணையும் இறுதிக்கட்டத்திற்கு வந்த பிறகு, இன்று ரிலையன்ஸ் கேபிட்டலின் வர்த்தகம் மீண்டும் நிறுத்தப்பட்டது. மும்பை பங்குச்சந்தை BSEயில் ரிலையன்ஸ் கேபிடல்ஸ் பங்கு வர்த்தகம் தடைசெய்யப்பட்ட செய்தி மீண்டும் தோன்றத் தொடங்கியது. 

ரிலையன்ஸ் கேபிட்டல் நிர்வாகக்குழு

நவம்பர் 29, 2021 அன்று, ரிலையன்ஸ் கேபிட்டல், பணம் செலுத்துவதில் உள்ள தவறு மற்றும் நிர்வாகச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு RBI ஆல் கலைக்கப்பட்டது. நிறுவனத்தின் கார்ப்பரேட் இன்சல்வென்சி ரெசல்யூஷன் பிராசஸ் (Corporate Insolvency Resolution Process (CIRP)) தொடர்பாக, ரிசர்வ் வங்கி நாகேஷ்வர் ராவ் ஒய் என்பவரை நிர்வாகியாக நியமித்தது. ரிலையன்ஸ் கேபிடல் மூன்றாவது பெரிய NBFC ஆகும். திவால் சட்டத்தின் (Insolvency and Bankruptcy Code (IBC).) கீழ் ரிசர்வ் வங்கி திவால் நடவடிக்கைகளைத் தொடங்கியது.

ஸ்ரீ குரூப் மற்றும் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (DHFL) ஆகிய இரண்டு NBFCகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், நிறுவனத்திற்கு எதிராக CIRP ஐத் தொடங்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் மும்பை பெஞ்சில் மத்திய வங்கியால் ஒரு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் தளர்வுகள்? சூப்பர் ஐடியா செய்யும் தமிழ்நாடு அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News