Post Office savings scheme: இந்த பாலிசியில் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் பெறலாம்!

Post office savings schemes: தபால் அலுவலகத்தினால் வழங்கப்படும் தொடர் வைப்புத் திட்டத்தில் நீங்கள் வெறும் ரூ.100 செலுத்தி கூட கணக்கை தொடங்கிக் கொள்ளலாம்

Written by - RK Spark | Last Updated : Jan 21, 2023, 01:38 PM IST
  • தபால் அலுவலக அசத்தல் சேமிப்பு திட்டம்.
  • 10 ஆண்டுகள் முதலீட்டில் ரூ.16 லட்சம் வருமானம் பெறலாம்.
Post Office savings scheme: இந்த பாலிசியில் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் பெறலாம்! title=

Post office savings schemes: நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வைத்திருக்கும் பணத்தை பாதுகாப்பான வழியில் முதலீடு செய்வதோடு சிறந்த வருமானத்தையும் பெற வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் இது உங்களுக்கான செய்தி தான். மத்திய அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அடுத்த பத்து ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.16 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இதுதவிர தபால் அலுவலகம் வழங்கும் இந்த திட்டமானது உங்களுக்கு கூடுதலாக பல்வேறு நன்மைகளையும் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் உங்களுக்கு எந்தவிதமான ஆபத்துக்களும் இல்லை மற்றும் உங்கள் பணத்திற்கு பாதுகாப்பான வகையிலும் சிறப்பான வகையிலும் வருமானம் கிடைக்கும்.

மேலும் படிக்க | வெறும் ரூ.19,500 விலையில் அறிமுகமானது ஜியோ லேப்டாப்! இத்தனை சிறப்பம்சங்களா?

தபால் அலுவலகத்தினால் வழங்கப்படும் தொடர் வைப்புத் திட்டத்தில் நீங்கள் வெறும் ரூ.100 செலுத்தி கூட கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். செலவினங்களைக் குறைத்து, வருவாயை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டம் பயனுள்ள திட்டமாகும். இந்த திட்டத்தில் கணக்கை தொடங்கியவர்கள் சுமார் ஐந்து ஆண்டுகள் பங்களித்த பின்னர் எந்த நேரத்திலும் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து கொள்ளலாம். அதேசமயம் கணக்கின் முதிர்வு காலம் 10 ஆண்டுகள் என்பதால் திட்டத்தின் முதிர்வில் பணத்தை எடுப்பது அதிக பலனை தரும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வட்டி விகிதம் 5.8 சதவீதம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

நீங்கள் ரூ.16 லட்சம் வருமானம் பெற விரும்பினால் மாதந்தோறும் ரூ.10,000 ஒதுக்க வேண்டும். பத்து வருடங்கள் வீதம் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 தொகையை நீங்கள் ஒதுக்கி வைத்தால், உங்களிடம் மொத்தமாக ரூ.12 மில்லியன் இருக்கும். இதனுடன் ஆண்டு வட்டி விகிதம் 5.8 சதவீதத்தை சேர்த்து கணக்கிட்டால் திட்டத்தின் முதிர்வில் ரூ.16,26,476 கிடைக்கும். ஆனால் திட்டத்தின் ஐந்து வருடத்திற்கு பின்னர் நீங்கள் இதிலுள்ள தொகையை எடுத்தால் குறைந்த அளவிலேயே உங்களுக்கு வருமானம் கிடைக்கப்பெறும். தவணை செலுத்தாத நான்கு மாதங்களுக்குப் பிறகு உங்கள் கணக்கு நிறுத்தப்படும், மற்றும் கணக்கை தொடங்க நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும். முறையான ஆவணங்களை கொடுத்து உங்கள் ஊரிலேயே உள்ள தபால் அலுவலகத்தில் நீங்கள் கணக்கை தொடங்கி கொள்ளலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: பட்ஜெட்டுக்கு பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், மாஸ் செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News