சிறுதொழில் தொடங்க மானிய வட்டியில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் தரும் திட்டம்! ஆதார் மட்டும் போதும்!

PM Svanidhi Yojana Loan Details : உத்தரவாதம் இல்லாமல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கும் இந்த பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா திட்டம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 23, 2024, 03:30 PM IST
  • உத்தரவாதம் இல்லாமல் மத்திய அரசு வழங்கும் கடன் திட்டம்
  • பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா திட்டம்
  • ஆதார் அட்டை இருந்தால் போதும்
சிறுதொழில் தொடங்க மானிய வட்டியில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் தரும் திட்டம்! ஆதார் மட்டும் போதும்! title=

தொழில் செய்து வாழ நினைப்பவர்களுக்கு முதலீட்டு பணம் கிடைப்பது என்பது சாமானியமானது அல்ல. அதிலும், அது சாமானிய குடிமக்களாக இருந்தால், பணம் என்பது மிகப் பெரிய தடைக்கல்லாக மாறிவிடுகிறது. எளிய மக்களை தொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்திவரும் ஒரு திட்டம் ஏழை எளிய மக்களுக்கு உதவியானதாக இருக்கிறது.

மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் பல வகையான திட்டங்களில் ஒன்றான ’பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா’ திட்டத்தின் பலனைப் பெற ஆதார் அட்டை மற்றும் கடனைப் பெறுவதற்காக ஒரு வங்கிக் கணக்கு மட்டும் இருந்தால் போதும். பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா என்ற மத்திய அரசு திட்டத்தைப் பற்றி பலருக்கு தெரியவில்லை. இந்தத் திட்டத்தின் மூலம் ஒருவர் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடன் பெறலாம்.

வியாபாரிகள், பெட்டிக்கடை  வைத்திருப்பவர்க முதல், தள்ளுவண்டியில் பொருட்கள் விற்பவர்கள் என பலவிதமான தொழிலுக்காக இந்தத் திட்டம் கடனுதவி வழங்குகிறது. தொழிலை விரிவுபடுத்த கடன் பெறலாம். இந்தத் திட்டத்தை யார் பயன்படுத்திக் கொள்ளலாம், விண்ணப்பிக்க்கும் தகுதி என்ன? தெரிந்துக் கொள்வோம்.

பிரதம மந்திரி ஸ்வானிதி யோஜனா 2024 

எவ்வளவு கடன் கிடைக்கும்?

மத்திய அரசின் கடனுதவி திட்டமான இது, உத்தரவாதம் தேவையில்லாத கடன் திட்டம் ஆகும். ஆனால், ஓராண்டு கடனுக்கு தான் கேரண்டி தேவையில்லை. இந்த திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும். கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், கடன் தொகை அதிகரிக்கப்பட்டு, அது ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படும்.

கடன் மானியம்

இந்தக் கடனுக்கு வட்டி மானியமும் கிடைக்கும். கடனை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே திருப்பிச் செலுத்தினால், கடனுக்கான வட்டி விகிதத்தில் கடன் பெற்றவருக்கு 7% வரை மானியம் கிடைக்கும் என்பதால் அருமையான இந்தத் திட்டத்தை பயன்படுத்திப் பலனடையலாம்.

மேலும் படிக்க | அடி தூள்... மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டிஏ உடன் இவையும் அதிகரிக்கும்

முன்கூட்டியே கடன் செலுத்துதல் 

பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா திட்டத்தில், கடனைக் காலத்திற்கு முன்பே நீங்கள் திருப்பிச் செலுத்தினால், அதற்கு அபராதத்தொகையாக கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.  

திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா திட்டத்தில் பயன்பெற விரும்பினால், உங்களுக்கு அருகில் உள்ள அரசு வங்கிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். வங்கியிலிருந்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, வங்கிக் கணக்கு விவரம் மற்றும் ஆதார் அட்டை நகலை இணைத்து விண்ணப்பிக்கவும்.

ஆஃப்லைனில், வங்கிகள் மூலம் மட்டுமே இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, தகுதி அடிப்படையில் கடன் வழங்கப்படும். 

பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனாவில் கடன் பெற தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டை

வங்கிக்கணக்கு

பிரதான் மந்திரி ஸ்வாநிதி யோஜனாவில் கடன் பெற பூர்த்தி செய்ய தேவையான தகவல்கள் 

விண்ணப்பதாரர் செய்யும் வேலை பற்றிய தகவல்.
பேன் கார்டு  
வருமான ஆதாரம்
உத்தரவாதம் இல்லாமல், வேறு எந்த ஆவணமும் தேவைப்படாமல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கும் இந்த பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா திட்டத்தின் பலனைப் பெற்று தொழிலை விரிவாக்கலாம்.

மேலும் படிக்க | PM விஸ்வகர்மா திட்டம்... 5% வட்டியில் ₹3 லட்சம் கடன்... ₹500 உதவித்தொகை.. பலன் பெறுவது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News