கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!

Changes From May 1, 2024: மே மாத தொடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சில விதிகள் அமலுக்கு வருகின்றன. இவை உங்கள் தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 23, 2024, 11:38 AM IST
  • ஏல்பிஜி சிலிண்டர் விலைகள் ஒவ்வொரு மாத துவக்கத்திலும் அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
  • இதன் பிறகு புதிய விலைகள் வெளியிடப்படுகின்றன.
  • அந்த வகையில் மே மாத தொடக்கத்திலும் எல்பிஜி விலைகள் குறித்து அரசாங்கம் அறிவிப்பை வெளியிடும்.
கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்! title=

Changes From May 1, 2024: இன்னும் சில நாட்களில் மே மாதம் தொடங்க உள்ளது. ஒவ்வொரு மாத துவக்கத்திலும் அரசாங்கத்தின் சில விதிகள் மாறுகின்றன. சில புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. மே மாத தொடக்கத்திலும் அப்படி சில விதிகள் அமலுக்கு வருகின்றன. இவை உங்கள் தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எல்பிஜி கேஸ் சிலிண்டர், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். மே 1 முதல் மாறவுள்ள மற்றும் புதிதாக அறிமுகமாகவுள்ள சில விதிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

எல்பிஜி சிலிண்டர் விலை | lpg cylinder price:
எல்பிஜி சிலிண்டர் விலைகள் ஒவ்வொரு மாத துவக்கத்திலும் அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இதன் பிறகு புதிய விலைகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் மே மாத தொடக்கத்திலும் எல்பிஜி விலைகள் (LPG Cylinder Price) குறித்து அரசாங்கம் அறிவிப்பை வெளியிடும். 14 கிலோ வீட்டு உபயோக மற்றும் 19 கிலோ வர்த்தக சிலிண்டர்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டும். கடந்த மாதம் டெல்லியில் ரூ.2253க்கு விற்பனை செய்யப்பட்ட கேஸ் சிலிண்டரின் விலை தற்போது ரூ.2028க்கு குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | Health Insurance: உடல் நல காப்பீடு பெற இனி வயது வரம்பு இல்லை.... IRDAI அதிரடி முடிவு..!

வங்கிகள் தொடர்பான விதிகள் | Bank related rules:
ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (ICICI Bank), எஸ் பேங்க் (Yes Bank) ஆகிய தனியார் வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கான கட்டணங்களை மாற்றியுள்ளன. இந்த புதிய கட்டணங்கள் மே 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதில் ஐசிஐசிஐ பேங்க் இனி டெபிட் கார்டுகளுக்கு ஆண்டுக் கட்டணம் வசூலிக்க இருக்கிறது. கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 99 ரூபாயும், மற்ற இடங்களில் ஆண்டுக்கு 200 ரூபாயும் டெபிட் கார்டு ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படும். காசோலைகளுக்கு ஆண்டுக்கு 25 காசோலைகளுக்கு கட்டணம் இல்லை. அதன் பிறகு, ஒவ்வொரு காசோலைக்கும் 4 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். வங்கியில் பணப் பரிவர்த்தனைக்கும் கட்டணம் மாற்றப்பட்டுள்ளது. 

அதேபோல் எஸ் வங்கி பொறுத்த வரை, பல்வேறு வகையான சேமிப்புக் கணக்குகளின் குறைந்தபட்ச சராசரி இருப்பு மாற்றப்பட்டுள்ளது. அக்கவுண்ட் ப்ரோ மேக்ஸில் குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.50 ஆயிரமாக இருக்கும். அதிகபட்ச கட்டணத்திற்கு ரூ.1,000 வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது சேவிங் அக்கவுண்ட் ப்ரோ பிளஸ், எஸ் எசென்ஸ் எஸ்ஏ, எஸ் ரெஸ்பெக்ட் எஸ்ஏ ஆகியவற்றில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.25 ஆயிரமாக இருக்கும். இந்தக் கணக்கிற்கான கட்டணங்களின் அதிகபட்ச வரம்பு ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன், இப்போது சேமிப்பு கணக்கு ப்ரோவில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.10,000 ஆக பராமரிக்கப்பட வேண்டும். இந்த மாற்றங்கள் அனைத்தும் மே முதல் தேதி முதல் அமலுக்கு வரும்.

மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD | Special FD for senior citizens:
HDFC வங்கியால் நடத்தப்படும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஸ்பெஷல் மூத்த குடிமக்கள் பராமரிப்பு FD திட்டமாகும், இதில் அதிக வட்டி விகிதங்களின் பலன் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டம் மே 2020 இல் தொடங்கப்பட்டது. இதில், முதலீடு செய்வதற்கான கடைசி தேதி 2024 மே 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News