சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகித விவரங்கள்: சிறிய சேமிப்பு, பெரிய வருமானம்

Small Saving Schemes: பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் வருமான விவரங்கள் பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2024, 10:54 AM IST
  • கிசான் விகாஸ் பத்ரா.
  • மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்.
  • செல்வமகள் சேமிப்புத் திட்டம்.
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகித விவரங்கள்: சிறிய சேமிப்பு, பெரிய வருமானம் title=

Small Saving Schemes: மிடிள் கிளாஸ் மக்களும் சிறு முதலீட்டாளர்கள்களும் பொதுவாக பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானம் அளிக்கக்கூடிய திட்டங்களிலேயே தங்கள் பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட பாதுகாப்பான திட்டங்களில் 'சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு' முக்கிய இடம் உள்ளது. இந்த முதலீட்டுத் திட்டங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. இவை சில்லறை முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களை வழங்குகின்றன. இத்திட்டங்கள், மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வழக்கமான இடைவெளியில் உத்தரவாதமான வருமானத்தை அளிக்கிறன. அவரவர் வசதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு திட்டங்களை தேர்வு செய்துகொள்ளாலாம். அதிக ரிஸ்க் எடுக்காமல், பாதுகாப்பான முதலீட்டை நாடும் முதலீட்டாளர்களுக்கு இவை ஏற்றதாக இருக்கும். இவற்றில் 6-8% வருமானம் கிடைக்கும்.

பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் வட்டி விகிதங்கள் (Interest Rate) மற்றும் வருமான விவரங்கள் பற்றி இங்கே காணலாம்.

அஞ்சலக சேமிப்புக் கணக்கு (Post Office Savings Account): 

இதில் குறைந்தபட்சமாக ரூ.500 டெபாசிட் செய்து கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தில் அதிகபட்ச டெபாசிட் வரம்பு கிடையாது. இதில் ஆண்டுக்கு 4% வட்டி இடைக்கிறது. வட்டி விகிதம் ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது.

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்கு (Post Office Time Deposit Account): 

இந்தக் கணக்குகளை குறைந்தபட்சமாக ரூ.1,000 மற்றும் ரூ.100 இன் மடங்குகளில் திறக்கலாம். இதில் அதிகபட்ச வரம்பு இல்லை.

1 ஆண்டு கால வைப்பு: இதற்கான வட்டி விகிதம் 6.9 சதவீதமாகும். 
2 வருட கால வைப்பு: வட்டி விகிதம் 7 சதவீதம்.
3 ஆண்டு கால வைப்பு: வட்டி விகிதம் 7.1 சதவீதம்.
5 ஆண்டு கால வைப்பு: வட்டி விகிதம் 7.5 சதவீதம்.
5 ஆண்டு தொடர் வைப்புத் திட்டம்: இதில் குறைந்தபட்சமாக ரூ.100 அல்லது ரூ.10-இன் மடங்குகளில் தொகையை செலுத்தி கணக்கை திறக்கலாம். இதில் ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படும். காலாண்டுக்கு ஒருமுறை இது கூட்டப்படுகிறது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme): 

குறைந்தபட்சமாக SCSS திட்டத்தில் ரூ.1,000 செலுத்தி கணக்கை தொடங்கலாம். இதில் அதிகபட்ச வரம்பு 30 லட்சம் ரூபாய் ஆகும். இதில் வழங்கப்படும் வட்டி விகிதம் 8.2 சதவீதம்.

மேலும் படிக்க | EPF Claim மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகிறதா? கவலை வேண்டாம், புதிய வழிகாட்டுதல்கள் இதோ

மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கு (Monthly Income Scheme Account): 

குறைந்தபட்சமாக MIS திட்டத்தில் ரூ.1,000 செலுத்தி கணக்கை தொடங்கலாம். இதில் அதிகபட்ச வரம்பு ஒற்றை கணக்குக்கு 9 லட்சம் ரூபாயாகவும் கூட்டு கணக்கிற்கு 15 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. இதில் வழங்கப்படும் வட்டி விகிதம் 7.4 சதவீதம்.

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate): 

குறைந்தபட்சமாக NSC திட்டத்தில் ரூ.1,000 செலுத்தி கணக்கை தொடங்கலாம். இதில் அதிகபட்ச வரம்பு இல்லை. இதில் வழங்கப்படும் வட்டி விகிதம் 7.7 சதவீதம் ஆகும். எனினும் இது முதிர்வின் போது அளிக்கப்படும். 

பிபிஎஃப் (PPF): 

ஒரு நிதியாண்டில் ஒருவர் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு ரூ.1.5 லட்சம் ஆகும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதம் (கூட்டு வட்டி).

கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra): 

KVP திட்டத்தில் முதலீட்டாளர் குறைந்தபட்சம் ரூ.1,000 மற்றும் ரூ.100 -இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். இதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை. இதில் ஆண்டுதோறும் கூட்டு வட்டியாக 7.5 சதவீதம் வழங்கப்படுகின்றது. 

மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் (Mahila Samman Savings Certificate): 

ஒருவர் குறைந்தபட்சம் ரூ.1,000 மற்றும் ரூ.100 -இன் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம். வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.5 சதவீதமாக இருக்கும்.

செல்வமகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Account Scheme): 

சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் (SSY) ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 மற்றும் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்து இந்தக் கணக்கைத் திறக்கலாம். இந்த திட்டத்தின் வட்டி விகிதம் ஜனவரி 1, 2024 முதல் ஆண்டுக்கு 8.2 சதவீதமாகும்.

மேலும் படிக்க | FASTag KYC அப்டேட் செய்யும் எளிய வழிமுறை... முழு விபரம் இதோ..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News