SCSS: மூத்த குடிமக்களுக்கான முத்தான சேமிப்பு திட்டம்.. பம்பர் லாபம், ஏகப்பட்ட நன்மைகள்

Saving Scheme For Senior Citizens: சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மிக பிரபலமான தபால் அலுவலகமும் மூத்த குடிமக்களுக்கான பல சேமிப்பு திட்டங்களை நடத்துகின்றது. அதில் ஒரு முக்கியமான திட்டம்தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 21, 2024, 06:05 PM IST
  • SCSS: முதலீட்டு வரம்புகள் மற்றும் வரி சலுகைகள் என்ன?
  • வட்டியுலேயே லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்.
  • இந்த கணக்கை மூடுவதற்கான செயல்முறை என்ன?
SCSS: மூத்த குடிமக்களுக்கான முத்தான சேமிப்பு திட்டம்.. பம்பர் லாபம், ஏகப்பட்ட நன்மைகள் title=

Saving Scheme For Senior Citizens: மனிதர்களாகிய நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. ஒவ்வொரு வயதிலும் மனிதர்களுக்கு ஒவ்வொரு விதமான தேவை இருக்கும். ஒரு குறிப்பிட்ட வயதானவுடன் நாம் பணத்தை ஈட்டுவது மிகவும் கடினமான ஒரு பணியாகிவிடும். இளமையிலேயே பணி ஓய்விற்கு பிறகான காலத்திற்காக சேமித்து வைப்பது நல்லது. நம் நாட்டில் மூத்த குடிமக்களுக்கான பல பிரத்யேக சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மிக பிரபலமான தபால் அலுவலகமும் (Post Office) மூத்த குடிமக்களுக்கான (Senior Citizens) பல சேமிப்பு திட்டங்களை நடத்துகின்றது. அதில் ஒரு முக்கியமான திட்டம்தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் எளிதாக முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச வருமானம் கிடைக்கும். மேலும் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகையும் கிடைக்கும். முதிர்ச்சிக்கு பிறகும், நீங்கள் விரும்பினால், இந்தத் திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.

SCSS: யார் இந்த கணக்கைத் திறக்க முடியும்? (Who Can Open SCSS Account)

- 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.
- இந்த கணக்கை தனிப்பட்ட திறனில் மட்டுமே திறக்க முடியும் அல்லது கணவன், மனைவி சேர்ந்து கூட்டுக் கணக்கைத் திறக்க முடியும்.
- கூட்டுக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகை முதல் கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டுமே செலுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இதில், 55 முதல் 60 வயது வரை உள்ளவர்களும் கணக்கு துவங்கலாம். இதில் விஆர்எஸ் பெற்றவர்களும் கணக்கை தொடங்கலாம். இது மட்டுமின்றி, நீங்கள் 50 வயதுக்கு மேற்பட்டவராகவும், ஓய்வு பெறும் வயது 60 வயதுக்குக் குறைவாகவும் இருந்தால், சலுகைகளைப் பெற்ற மூன்று நாட்களுக்குள் முதலீடு செய்யலாம். 

SCSS: முதலீட்டு வரம்புகள் மற்றும் வரி சலுகைகள் என்ன?

- தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000 ரூபாயில் முதலீடு செய்யத் தொடங்கலாம். 
- இந்த திட்டத்தில் ரூ.1000 மடங்குகளில் முதலீடு செய்யலாம். 
- இதில், நீங்கள் தொடங்கும் அனைத்து கணக்குகளையும் சேர்த்து 30 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். 
- இந்த தொகைக்கு மேல் முதலீடு செய்தால் பணம் திரும்பக் கொடுக்கப்படும்.
- இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடுகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் பலன்களுக்குத் தகுதியுடையவை. 
- அதாவது இந்த திட்டத்தில் செய்யும் முதலீட்டில் வரிச் சலுகைகளைப் பெறலாம்.

மேலும் படிக்க | சமூக வலைதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? இதோ ஈசி டிப்ஸ்!

SCSS: வட்டியுலேயே லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்

- தற்போது, ​​தபால் துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (Senior Citizens Saving Scheme) ஆண்டு வட்டியாக 8.2 சதவீதம் வழங்கப்படுகிறது. 
- இதன் வட்டி காலாண்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது. 
- கணக்கு வைத்திருப்பவர்கள் காலாண்டு வட்டியை கோரவில்லை என்றால், அந்த வட்டிக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது. 
- அதே தபால் அலுவலகத்தில் உள்ள சேமிப்புக் கணக்கின் மூலமாக ஆட்டோ கிரெடிட் மூலம் வட்டியைப் பெறலாம்.

SCSS: இந்த கணக்கை மூடுவதற்கான செயல்முறை என்ன? 

- தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கை  கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு மூடலாம்.
- இதற்கு பாஸ்புக்குடன் விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
- கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், இறந்த தேதியிலிருந்து அந்தக் கணக்கிற்கு தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் விகிதத்தில் வட்டி கிடைக்கும்.
- கணவன் அல்லது மனைவி மட்டுமே கூட்டுக் கணக்கை பராமரிக்கும் நபர்களாக இருந்தால், கணக்கு முதிர்வு வரை தொடரலாம். 

மேலும் படிக்க | NPS Log-In செயல்முறையில் மாற்றம்: ஏப்ரல் 1 முதல் புதிய விதி, முழு தகவல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News