Post Office ஜாக்பாட் திட்டம்: ஒரு முறை முதலீடு, அசத்தலான வட்டி, மாதா மாதம் நிச்சய வருமானம்

Post Office MIS Scheme: பல சிறுசேமிப்பு திட்டங்கள் தபால் துறை மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் பிரபலமான ஒரு திட்டம்தான் மாதாந்திர வருமானத் திட்டம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 24, 2023, 02:46 PM IST
  • தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்.
  • ஐந்து ஆண்டுகளுக்கு வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை.
  • 5 ஆண்டுகளில் வட்டியில் இருந்து மட்டும் ரூ.1.84 லட்சம் கிடைக்கும்.
Post Office ஜாக்பாட் திட்டம்: ஒரு முறை முதலீடு, அசத்தலான வட்டி, மாதா மாதம் நிச்சய வருமானம் title=

Post Office Scheme: தபால் அலுவலகத்தின் மூலம் பல சேமிப்பு திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் மக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான வழியில் சேர்த்து வைப்பதோடு நல்ல வருமானத்தையும் பெற முடியும். அஞ்சல் அலுவலக திட்டங்களில் மிக பிரபலமான திட்டமான மாதாந்திர வருமானத் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இத்திட்டத்தில் 5 ஆண்டுகளில் இரட்டிப்பு லாபம் ஈட்டலாம்.

மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme-MIS)

பல சிறுசேமிப்பு திட்டங்கள் தபால் துறை (Post Office Saving Schemes)  மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் பிரபலமான ஒரு திட்டம்தான் மாதாந்திர வருமானத் திட்டம். இது எம்ஐஎஸ் (MIS) கணக்கு என்றும் அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்ப, மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கில் மொத்தத் தொகை டெபாசிட் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளர்கள் ஒரு நிலையான தொகையை வட்டியாகப் பெறுவார்கள்.

இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். முதிர்ச்சியின் போது அசல் தொகையும் திருப்பித் தரப்படும். மார்ச் 31 அன்று, நிதி அமைச்சகம் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தியது. இப்போது MIS திட்டத்தில் 7.4 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு 7.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

போஸ்ட் ஆபிஸ் எம்ஐஎஸ் திட்டத்தின் (Post Office MIS Scheme) சிறப்பு என்னவென்றால், நீங்கள் முதலீடு செய்யும் நேரத்தில் இருக்கும் வட்டி விகிதம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பொருந்தும்.

ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் திருத்தப்படுகிறது. திட்டத்தின் கால அளவான ஐந்து ஆண்டுகளில் வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலும், அது முதலீட்டாளருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மேலும் படிக்க | PM கிசான் 15வது தவணை ரூ.2000 உங்களுக்கு கிடைக்குமா... சரிபார்ப்பது எப்படி!

5 ஆண்டுகளில் வட்டியில் இருந்து மட்டும் ரூ.1.84 லட்சம் கிடைக்கும்

போஸ்ட் ஆபிஸ் எம்ஐஎஸ் கால்குலேட்டரின் (Post Office MIS Calculator) படி, ஒரு முதலீட்டாளர் இந்தத் திட்டத்தில் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், அவருக்கு ஒவ்வொரு மாதமும் வட்டியாக ரூ.3,083 கிடைக்கும்.

இந்தத் தொகை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் பெறப்படும். இந்த ஐந்து ஆண்டுகளில், கணக்கு வைத்திருப்பவருக்கு வட்டியில் இருந்து மட்டும் மொத்தம் ரூ.1,84,980 கிடைக்கும். ஐந்தாண்டுகள் முடிந்த பிறகு ரூ.5 லட்சம் திருப்பித் தரப்படும்.

பட்ஜெட் 2023 -இல் எம்ஐஎஸ் திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றம்

பட்ஜெட் 2023 இல் அஞ்சல் அலுவலக எம்ஐஎஸ் திட்டத்தில் மற்றொரு மாற்றம் செய்யப்பட்டது. இது நிதி மசோதா 2023 இல் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விதி ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.

MIS Scheme: எவ்வளவு முதலீடு செய்யலாம்?

அஞ்சல் அலுவலக எம்ஐஎஸ் திட்டத்தில் தனிநபர் ஒருவர் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முன்னதாக இந்த வரம்பு ரூ.4.5 லட்சமாக இருந்தது. கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான இந்த வரம்பு இப்போது ரூ.15 லட்சமாக உள்ளது. முன்னதாக இதன் வரம்பு ரூ.9 லட்சமாக இருந்தது.

POMIS: சில முக்கிய விதிகள்

- MIS இல், இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். இந்தக் கணக்கிலிருந்து பெறப்படும் வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.

- கூட்டுக் கணக்கை எந்த நேரத்திலும் ஒற்றைக் கணக்காக மாற்றலாம். ஒற்றைக் கணக்கை கூட்டுக் கணக்காகவும் மாற்றலாம். கணக்கில்  மாற்றங்களை செய்ய, அனைத்து கணக்கு உறுப்பினர்களும் ஒரு கூட்டு விண்ணப்பத்தை வழங்க வேண்டும்.

-MIS கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றவும் முடியும்.

- முதிர்வு காலம் முடிவடைந்ததும், அதாவது ஐந்து ஆண்டுகள் ஆனதும், அதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். எம்ஐஎஸ் கணக்கில் நாமினேஷன் வசதி உள்ளது.

மேலும் படிக்க | EPS 95 Scheme: ஊழியர் இறந்தால் குடும்ப உறுப்பினர்களுகு ஓய்வூதியம் கிடைக்குமா? இதற்கான விதி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News