நெல்லை டூ காசி - கயா - அயோத்தி ... IRCTC வழங்கும் சிறப்பு ரயில் சேவை... மிஸ் பண்ணாதீங்க!!

IRCTC Bharat Gaurav Tour Package: இந்தியன் ரயில்வேயின் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் IRCTC தென் மண்டலம் சார்பில் ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்காகப் புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 10, 2024, 11:11 AM IST
  • தென் மண்டலம் சார்பில் ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்காகப் புண்ணிய தீர்த்த யாத்திரை
  • பாரத் கௌரவ் சிறப்பு ரயில் சேவை
  • பயணிகளுக்கு தங்கும் வசதி - உணவுக்கான ஏற்பாடுகள்.
நெல்லை டூ காசி - கயா - அயோத்தி ... IRCTC வழங்கும் சிறப்பு ரயில் சேவை... மிஸ் பண்ணாதீங்க!! title=

IRCTC Bharat Gaurav Tour Package: இந்தியன் ரயில்வேயின் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் என்னும் IRCTC தென் மண்டலம் சார்பில் ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்காகப் புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது. அதில் இந்த ஆண்டுக்கான 'பாரத் கௌரவ்' ஆன்மிக சுற்றுலா ரயில் சேவைக்கு தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம், காசி - கயா - அயோத்தி ஆகிய இடங்களுக்கு குறைந்த செலவில் பயணம் செய்யலாம்.

சிறப்பு ரயில் தமிழ்நாட்டில் நிற்கும் இடங்கள்

ஜூன் மாதம் 6 ஆம் தேதி புறப்படும் இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் - சென்னை எழும்பூர் மற்றும் காட்பாடி காசி, திரிவேணி சங்கமம், கயா, அயோத்தி ஆகிய புண்ணிய தலங்களுக்கு ஒன்பது நாட்கள் சுற்றுலா பயணமாகச் (Tourism) செல்ல உள்ளது.

பாரத் கவுரவ் ரயிலில் பயணம் செவதற்கான கட்டணம்

IRCTC பாரத் கவுரவ் சுற்றுலா பயணக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.18,850 செலவாகும். இதில் ரயில் டிக்கெட், தங்கும் வசதி, உணவு. உள்ளூரில் சுற்றி பார்க்க வசதி உள்ளிட்ட பல சேவைகள் கிடைக்கும்,. 5-11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 17 ஆயிரத்து 560 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுவதும் படுக்கை வசதியுடன் கூடிய 11 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 500 பேர் வரை பயணம் செய்யலாம். பயணிகளின் வசதிக்காகத் திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட பத்து ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என்று ஐஆர்சிடிசி தென் மண்டலம் அறிக்கை தெரிவிக்கிறது. 

மேலும் படிக்க | குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!

பயணிகளுக்கு தங்கும் வசதி - உணவுக்கான ஏற்பாடுகள்

இந்த ரயிலில் பயணிகளுக்குத் தினமும் மூன்று வேளையும் தென்னிந்திய சைவ உணவு, உள்ளூரில் சுற்றிப் பார்ப்பதற்கான போக்குவரத்து வசதி மற்றும் தங்குமிடம் என அனைத்தும் ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மேலும் தகவலுக்கு 9003140739, 8287932070, 9003140680 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஐஆர்சிடிசியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாரத் கௌரவ் சிறப்பு ரயில் சேவை

பாரத் கௌரவ் யாத்திரை என்ற பெயரில், காலாச்சார ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியது. இந்த ரயில்களில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு டூர் பேக்கேஜ்கள் டிக்கெட் உட்பட தங்கும் வசதி, சாப்பாடு போன்றவை வழங்கப்படுகின்றன. பயணம் மற்றும் அதனுடன் இணைந்த உள் சேவைகளாக, இதில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றவுடன், உள்ளூரில் சுற்றி பார்க்க பேருந்துகள் மூலம் பயணம் மற்றும் உல்லாசப் பயணங்கள், ஹோட்டல்களில் தங்குதல், சுற்றுலா வழிகாட்டிகள், உணவு, பயணக் காப்பீடு போன்ற வசதிகளும், சேவைகள் வழங்கப்படுகின்றன. 

மேலும் படிக்க | கேரளா டூர் செல்ல பிளானா... IRCTC வழங்கும் இந்த அசத்தல் பேக்கேஜை மிஸ் பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News