ஒருவருக்கு Cheque கொடுக்கும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

முழுவதும் நிரப்பப்பட்ட காசோலை தவறாகப் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் நிதி இழப்புகள் மற்றும் சர்ச்சைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 3, 2024, 07:06 AM IST
  • காசோலையில் அதிக கவனம் தேவைப்படுகிறது.
  • இதன் மூலம் மோசடிகள் நடக்கலாம்.
  • எனவே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
ஒருவருக்கு Cheque கொடுக்கும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்! title=

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கியும் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பாஸ்புக், ஏடிஎம் கார்டு மற்றும் காசோலையை வழங்குகின்றன.  எளிய நிதி பரிவர்த்தனைகளுக்கான இது போன்ற தேவையான வசதிகளை செய்து தருகின்றனர்.  ஆனால் காசோலை (Cheque) பயன்படுத்தும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.  தனிநபர்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு இடையே ஒரு பாலமாக காசோலை உள்ளது. காசோலை மூலம் யாருக்கு வேண்டும் என்றாலும் பணம் கொடுக்கலாம். ஒருவருக்கு காசோலை கொடுக்கும் முன்பு சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இதில் சட்ட மற்றும் நிதி தாக்கங்கள் இருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். கையொப்பம் இடப்பட்ட காசோலை தவறாகப் பயன்படுத்தப்படலாம். மேலும் இதில் மோசடிகளும் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | EPFO New Rules: மிகப்பெரிய நிவாரணம், இனி வேலை மாறினால் பிஎஃப் பணம் தானாக மாற்றப்படும்

தொகையை சரியாக எழுத வேண்டும்

காசோலையில் நீங்கள் எழுதும் ​குறிப்பிட்ட தொகைக்கு பிறகு "ONLY" என்ற வார்த்தையை கண்டிப்பாக எழுத வேண்டும்.  இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மோசடிகளைத் தடுக்க உதவுகிறது. நீங்கள் எழுதிய தொகையை இதன் மூலம் மாற்றி எழுத முடியாது.  காசோலையில் "ONLY" என்ற வார்த்தையை சேர்ப்பது பாதுகாப்பான பரிவர்த்தனையை சேர்க்கிறது. அதே போல, நீங்கள் காசோலையை வழங்கும் நபர் அல்லது வணிகத்தின் பெயரை சரியாகவும், துல்லியமாகவும் எழுத வேண்டும். பெயர் எழுதுவதில் உள்ள தவறுகள் காசோலையை சரிசெய்வதில் தாமதம் அல்லது வங்கியால் நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.

வெற்று காசோலைகளில் கையொப்பம் ஐட வேண்டாம்

வெற்று காசோலையில் கையெழுத்திடக்கூடாது என்று அடிப்படை விதி ஆகும். காசோலையில் கையொப்பமிடுவதற்கு முன் அதில் பெயர், தொகை மற்றும் குறிப்பாக தேதி ஆகியவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். வெற்று காசோலையை கையொப்பமிட்டால் இதன் மூலம் மோசடி நடைபெற அதிக வாய்ப்புள்ளது.  

சரியான கையொப்பம் முக்கியமானது

நீங்கள் காசோலையில் கையொப்பமிடும்போது, ​​கவனமாக இருப்பது முக்கியம். ஏனெனில் உங்களது கையொப்பத்தில் ஒரு சிறிய மாற்றம் இருந்தால் கூட அந்த காசோலை வங்கியால் நிராகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, காசோலையை வழங்கும்போது உங்கள் கையொப்பம் சரியானதாகவும், பிழையின்றியும் இருக்க வேண்டும். 

தேதி குறிப்பிடுவது முக்கியம்

காசோலை கொடுக்கும் முன்பு அதில் எழுதப்படும் தேதியை எப்போதும் இருமுறை சரிபார்க்க வேண்டும். இந்த சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தடுக்க உதவுகிறது. அதே போல காசோலை மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க, காசோலைகளை எழுத பால்பாயிண்ட் பேனா அல்லது உங்களுக்கு பிடித்த ஒரே பேனாவை தேர்வு செய்வது நல்லது.  

சமநிலையை பராமரிக்கவும்

காசோலை பவுன்ஸ் ஆகாமல் இருப்பது முக்கியமான ஒன்று ஆகும். ஒருவருக்கு காசோலை கொடுக்கும் முன்பு, உங்கள் வங்கி கணக்கில் பொதுவான தொகை இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.  வங்கிகளால் காசோலைகள் நிராகரிக்கப்படுவதற்கு வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லாதது ஒரு பொதுவான காரணமாகும். எனவே, காசோலையை வழங்குவதற்கு முன் உங்கள் வங்கி கணக்கு இருப்பை சரிபார்ப்பது நல்லது.  அதே போல காசோலையை கொடுக்கும் முன்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக அதில் உள்ள எண்ணை நோட் செய்து கொள்வது நல்லது. 

மேலும் படிக்க | வங்கி FD மீதான வட்டி விகிதங்கள் 10% என்ற அளவை தொடுமா.. நிபுணர்கள் கூறுவது என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News