வங்கி FD மீதான வட்டி விகிதங்கள் 10% என்ற அளவை தொடுமா.. நிபுணர்கள் கூறுவது என்ன!

Interest Rates on Fixed Deposits: ரிசர்வ் வங்கியின் வரவிருக்கும் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில், வங்கிகள் வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலான முடிவுகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 2, 2024, 11:04 AM IST
  • இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) நிதிக் கொள்கைக் குழுவின் அறிவிப்பில் மீது தான் அனைவரது கவனமும் உள்ளது.
  • FD மீதான வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஏற்படுவது எப்போது?
  • ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரிக்குமா?
வங்கி FD மீதான வட்டி விகிதங்கள் 10%  என்ற அளவை தொடுமா.. நிபுணர்கள் கூறுவது என்ன! title=

Interest Rates on Fixed Deposits: ரிசர்வ் வங்கியின் வரவிருக்கும் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில், வங்கிகள் வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலான முடிவுகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. FD வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான முடிவு மத்திய வங்கியின் முடிவு மட்டுமல்ல, பல்வேறு காரணிகளைப் பொறுத்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் FDகளின் வட்டி விகிதங்கள் எந்த வகையில் மாற்றம் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழு (Monetary Policy Committee) 2024-25 நிதியாண்டிற்கான முதல் கூட்டத்தை ஏப்ரல் 3 முதல் 5 வரை நடத்த உள்ளது. ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தின் கடைசி நாளில் அதாவது ஏப்ரல் 5 ஆம் தேதி,ரெப்போ விகிதத்தை  அறிவிக்கும். இம்முறை ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி 10% ஆக உயர்த்தப்படலாம் என்று சாமானியர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தற்போது, நாட்டில் உள்ள பல சிறு நிதி வங்கிகள் 9.5 சதவீத வட்டியை வழங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், FD க்கு கிடைக்கும் வட்டி 9.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் என்ற அளவினை எட்டும். இருப்பினும், இது நடக்குமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிடப்படும் அறிவிப்பு 

ஏப்ரல் 5, 2024 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) நிதிக் கொள்கைக் குழுவின் அறிவிப்பில் மீது தான் அனைவரது கவனமும் உள்ளது. இப்போது வட்டி விகிதத்திற்கான குறைப்புக்கான வாய்ப்பும் குறைவாக உள்ளது.  FD வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்குமா? FD மீதான வட்டி விகிதங்கள் வரும் மாதங்களில் 10%  என்ற அளவை அடையுமா?  போன்ற கேள்விகள் சாமானிய மக்கள் மனதில் எழுந்துள்ளன.

மேலும் படிக்க | இப்போ இதுதான் ட்ரெண்ட்! ‘இந்த’ தொழில் செய்தால் கூடிய விரைவில் லட்சாதிபதி ஆகலாம்..

ஏற்றத்தில் பங்குச் சந்தைகள்

"இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு ஏப்ரல் 3-5, 2024 வரை கூடி, கொள்கை விகிதங்களை முடிவு செய்யும். பணவியல் கொள்கை அறிக்கையானது பொருளாதாரம், பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் பற்றிய முக்கியமான குறிப்புகளை வழங்கும்" என்று மூத்த துணைத் தலைவர் அர்விந்தர் சிங் நந்தா தெரிவித்தார். கடந்த வாரம், மும்பை பங்குச் சந்தை 819.41 புள்ளிகள் அல்லது 1.12 சதவீதம் உயர்ந்தது, மேலும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 230.15 புள்ளிகள் அல்லது 1.04 சதவீதம் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

FD மீதான வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஏற்படுவது எப்போது?

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தும் வரை FD வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது. பல சிறு நிதி வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு FD க்கு 9.2% முதல் 9.5% வரை வட்டி வழங்குகின்றன. ஸ்டேட் பேங்க ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற பொது வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.75 சதவிகித வட்டியை வழங்குகின்றன.

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரிக்குமா?

வங்கிகள் FD வட்டி விகிதங்களை ரெப்போ விகிதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கின்றன. FD வட்டி விகிதங்கள் மற்றும் ரெப்போ விகிதங்கள் கிட்டத்தட்ட ஒரே திசையில் மாறும். ரெப்போ விகிதம் அதிகரிக்கும் போது, ​​பொதுவாக FD மீதான வட்டி விகிதங்களும் அதிகரிக்கும். இதேபோல், மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கும் போது, ​​FD முதலீடுகள் மீதான வட்டி விகிதங்களும் குறைக்கப்படுகின்றன. பெரும்பாலான வல்லுநர்கள் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்றே  கூறுகிறார்கள்.

மேலும் படிக்க | New Rules April 2024: இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்! முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News