கட்டணங்களை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி! இனி இவற்றிற்கு கூடுதல் கட்டணம்!

தனியார் வங்கியான ஐசிஐசிஐ சேமிப்புக் கணக்குகளுக்கான சேவைக் கட்டணங்களைத் தற்போது உயர்த்தி உள்ளது.  புதிய கட்டணங்கள் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 21, 2024, 01:13 PM IST
  • ஐசிஐசிஐ வங்கியின் புதிய கட்டணங்கள்.
  • மே 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
  • பல்வேறு கட்டண முறைகளில் மாற்றம் வந்துள்ளது.
கட்டணங்களை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி! இனி இவற்றிற்கு கூடுதல் கட்டணம்! title=

இந்தியாவின் முன்னணி வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ தனது சேமிப்புக் கணக்கு சேவைக் கட்டணங்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன் டெபிட் கார்டு கட்டணங்கள், பண பரிவர்த்தனைகள், காசோலை வழங்குவதற்கான கட்டணம் மற்றும் பலவற்றிற்கு வங்கி சேவை கட்டணங்களில் மாற்றங்கள் செய்துள்ளன.  இந்த திருத்தப்பட்ட கட்டணங்கள் மே 1, 2024 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய திருத்தப்பட்ட கட்டணங்களின் மூலம் ஐசிஐசிஐ வங்கி வழக்கமான இடங்களில் பயன்படுத்தப்படும் டெபிட் கார்டுகளுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.200 வசூலிக்கும்.

மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: எகிறும் அகவிலைப்படி, HRA.. முழு கணக்கீடு இதோ

ஐசிஐசிஐ புதிய கட்டணங்கள்

- முதல் 25 காசோலைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. அதன் பிறகு பயன்படுத்தும் ஒவ்வொரு காசோலைக்கு ரூ. 4 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், பரிவர்த்தனை வரம்பு ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த கிளையில் மாதத்திற்கு 3 முறை இலவச பணப் பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம்.  அதற்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது.  அதாவது முதல் மூன்று பரிவர்த்தனைகள் இலவசம். இந்த வரம்பை மீறினால் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.150 வசூலிக்கப்படும். 

- மற்ற வங்கிகளில் பண பரிவர்த்தனைகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,000க்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும்.  ரூ.25,000க்கு ரூ.150 கட்டணம் விதிக்கப்படும். அதே போல டிமாண்ட் டிராப்ட் (டிடி) அல்லது பே ஆர்டர் (பிஓ) ரத்து செய்தல், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிகழ்வுக்கு ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும்.

- உடனடி பணம் செலுத்தும் சேவை (IMPS) பரிவர்த்தனைகளுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2.50 முதல் ரூ.15 வரை கட்டணம் வசூலிக்கப்படும். 

- டெபாசிட் மிஷின்களில் பண பரிவர்த்தனை செய்தால் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும். வங்கி விடுமுறை நாட்களில் மற்றும் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை இயந்திரங்களில் ரூ.10,000க்கு மேல் டெபாசிட் செய்தால் இந்த கட்டணங்கள் பொருந்தாது. 

மேலும் படிக்க | Post Office RD: மாதம் ரூ.5000 முதலீட்டை... ரூ.3.57 லட்சமாக ஆக்கும் ஜாக்பாட் திட்டம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News