மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் திட்டங்கள்: அற்புதமான வருமானத்துடன் வரி விலக்கும் கிடைக்கும்

Senior Citizens Saving Schemes: மூத்த குடிமக்கள் பெரும்பாலும் மொத்தமாக கிடைக்கும் தங்கள் ஓய்வூதியப் பணத்தை பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இந்த திட்டங்களின் மூலம் முதலீட்டில் நல்ல வருமானம் கிடைக்கின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 10, 2024, 10:47 AM IST
  • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூத்த குடிமக்களுக்கான மிகச்சிறந்த முதலீட்டுத் திட்டமாக கருதப்படுகிறது.
  • தற்போது இந்த திட்டத்தில் 8.2 சதவீத வட்டி கிடைக்கின்றது.
  • அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலும் அரசாங்கம் இதில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் திட்டங்கள்: அற்புதமான வருமானத்துடன் வரி விலக்கும் கிடைக்கும் title=

Senior Citizens Saving Schemes: மனிதர்களாகிய நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. வயதிற்கு ஏற்ப நமது தேவைகளும் மாறுபடுகின்றன. வயோதிகத்தில் பொதுவாக நம்மால் வழக்கத்தை போல பணம் சம்பாதிக்க முடியாது என்பதால், இள வயதிலேயே வயோதிகத்திற்கான நிதி திட்டமிடலை செய்வது நல்லது. இதுமட்டுமின்றி, பணி ஓய்விற்கு பிறகு பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் முடிந்தவரை நல்ல வருமானம் பெற வேண்டும் என்றும் மூத்த குடிமக்கள் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட, மூத்த குடிமக்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள சில அற்புதமான திட்டங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மூத்த குடிமக்கள் பெரும்பாலும் மொத்தமாக கிடைக்கும் தங்கள் ஓய்வூதியப் பணத்தை பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இந்த திட்டங்களின் மூலம் முதலீட்டில் நல்ல வருமானம் கிடைக்கின்றது. இவற்றில் அதிக வருமானத்யையும் அளித்து வரியையும் சேமிக்கும் திட்டங்களுக்கான தேடல் மூத்த குடிமக்களுக்கு எப்போதும் இருக்கின்றது. வயது மூப்பூ காரணமாக நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்ய பலர் விரும்ப மாட்டார்கள். இவற்றின் லாக் இன் காலமும் அதிகமாக இருக்கக்கூடாது என்பதும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. 

மூத்த குடிமக்களின் இந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் சில நல்ல திட்டங்கள் உள்ளன. இவை நல்ல வருமானத்தையும் அளிக்கின்றன. மூத்த குடிமக்களுக்கான அப்படிப்பட்ட சில நல்ல திட்டங்களைப் பற்றி இங்கே காணலாம். 

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Saving Scheme) மூத்த குடிமக்களுக்கான மிகச்சிறந்த முதலீட்டுத் திட்டமாக கருதப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் 8.2 சதவீத வட்டி கிடைக்கின்றது. அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலும் அரசாங்கம் இதில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இதில் 1.50 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் வருமான வரி சட்டம் (Income Tax Rules) 80C -இன் கீழ் வரி விலக்கு பெறலாம். இந்த திட்டத்தின் முதலீட்டு வரம்பு ரூ.30 லட்சம் ஆகும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். எனினும், இதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். 

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC)

மூத்த குடிமக்கள் தேசிய சேமிப்புச் சான்றிதழின் (National Savings Certificate) மூலம் வரியைச் சேமிக்கலாம். தேசிய சேமிப்புச் சான்றிதழுக்கான வட்டி விகிதம் இப்போது 7.7 சதவீதமாக உள்ளது. இதன் லாக்-இன் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அதாவது ஐந்து ஆண்டுகள் வரை வட்டி கிடைக்கும். அதன் பிறகு இதில் முதலீடு செய்தால், முதலீடு செய்த தொகையே கிடைக்கும், அதற்கு வட்டி கிடைக்காது. இதிலும், 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வருடாந்திர முதலீட்டுக்கு வரி விலக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க்க | வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை... முக்கிய அப்டேட் அளித்த ரயில்வே அமைச்சர்!

வரி சேமிப்பு ஃபிக்ஸ்ட் டெபாசிட் (TSFD)

அனைத்து வங்கிகளிலும் வரி சேமிப்பு ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்கள் (Tax Saving Fixed Deposit) உள்ளன. இது மிகவும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. இதிலும் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டில் வரி விலக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி வங்கிகள் மற்றும் முதலீட்டின் காலத்தைப் பொறுத்தது. பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. சாதாரண வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்கள் பொதுவாக TSFD இல் அதிக வட்டி விகிதங்களைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS)

ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தின் (Equity Linked Savings Scheme) சிறப்பம்சம் என்னவென்றால், அதில் உங்கள் முதலீடு 3 ஆண்டுகளுக்கு மட்டுமே லாக் செய்யப்படிருக்கும். 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வருடாந்திர முதலீட்டில் 80C இன் கீழ் வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், ELSS திட்டங்களில் சில ஆபத்துகளும் உள்ளன. மியூச்சுவல் ஃபண்டுகள் இந்தத் திட்டத்தின் பணத்தை பங்குச் சந்தையில் (Share Market) முதலீடு செய்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து இதில் வருமானம் இருக்கும். சந்தையில் பெரிய சரிவு ஏற்பட்டால், நஷ்டம் ஏற்படும். சந்தை போக்கு நன்றாக இருந்தால், லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க | Gratuity Rules: ஊழியர்களின் பணிக்கொடை தொடர்பான விதிகளை மாற்றிய மத்திய அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News