Post Office Schemes: எந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும்

நீங்கள் ஒரு முறை பணத்தை முதலீடு செய்தால், வீட்டில் உட்கார்ந்த படி நல்ல லாபத்தை ஈட்டலாம். இதற்கு போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 29, 2022, 08:50 AM IST
  • தபால் அலுவலக திட்டங்கள்
  • வீட்டில் உட்கார்ந்து சம்பாதிக்கவும்
  • போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் முதலீடு
Post Office Schemes: எந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் title=

இந்தியாவில் தபால் அலுவலக சேமிப்புத் திட்டம் 2022: உங்கள் பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்ய நினைத்தால், இந்தச் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றால், நாங்கள் உங்களுக்கு தபால் அலுவலக சேமிப்புத் திட்டத்தைப் பற்றி தகவல் வழங்க உள்ளோம். இதில் குறைந்த பணத்தை முதலீடு செய்தும் நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வீட்டில் அமர்ந்த படி நல்ல லாபத்தை ஈட்டலாம். அரசாங்கம் வட்டி விகிதத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. அஞ்சல் அலுவலகங்கள், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, தபால் அலுவலக மாதாந்திர வருமானக் கணக்கு ஆகியவற்றில் 2 மற்றும் 3 வருட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! கிராஜூட்டி, ஓய்வூதியம் பறிக்கப்படலாம்!

அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, இதில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும் , அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்ய சிறந்த வாய்ப்பு கிடைக்கும். இந்திய அஞ்சல் துறையின் திட்டங்கள் அரசின் ஆதரவுடன் இயங்குகின்றன. அவை மிகவும் பாதுகாப்பானவை, இது தவிர, அவற்றில் முதலீடு செய்வது வருமான வரியின் 80-சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கிறது.

சிறிய திட்டங்களுக்கு வட்டி கிடைக்கும்
முன்னதாக, 2021-22 முதல் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டன. அப்போது இந்த திட்டங்களுக்கான வட்டியை அரசு குறைத்திருந்தது. இம்முறை வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய கட்டணங்கள் அக்டோபர் 1, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன.

கிசான் விகாஸ் பத்ராவில் இவ்வளவு லாபம் இருக்கும்
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் மற்றும் வட்டி இரண்டையும் மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. முன்னதாக, இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 124 மாதங்களாக இருந்த நிலையில், தற்போது அது 123 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதத்திலும் மாற்றம் செய்யப்பட்டு, முன்பு இருந்த 6.9 சதவீதத்தில் இருந்து தற்போது 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

எவ்வளவு வட்டி கிடைக்கும்

* அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், இப்போது 7.4 சதவீதத்திற்கு பதிலாக 7.6 சதவீத வட்டி கிடைக்கும்.
* தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (எம்ஐஎஸ்) இப்போது 6.7 சதவீத வட்டியைப் பெறுகிறது, முன்பு 6.6 சதவீதமாக இருந்தது. இது 10 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) ஆகியவற்றின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.
* 2 வருட நிலையான வைப்புத்தொகைக்கான தபால் அலுவலக வட்டி 20 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது வட்டி விகிதம் 5.7 சதவீதமாகிவிட்டது. இதற்கு முன்பு 5.5 சதவீத வட்டி கிடைத்து வந்தது.
* தபால் அலுவலக 3 ஆண்டு நிலையான வைப்பு 30 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதற்கான வட்டி 5.5 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News