வேலை மாற்றியபின் இபிஎஃப் கணக்கை மர்ஜ் செய்வது மிக அவசியம்: முழு செயல்முறை இதோ

EPFO Update: ஊழியர் இபிஎஃப் கணக்குகளை ஒன்றிணைக்கவில்லை என்றால், அவரது ஒவ்வொரு நிறுவனங்களின் கால அளவும் வித்தியாசமாக கணக்கிடப்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 22, 2023, 09:24 PM IST
  • கணக்குகளை இணைக்காததால் ஏற்படும் விளைவுகள் என்ன?
  • கணக்குகளை எவ்வாறு இணைப்பது?
  • இதற்கான முழு செயல்முறை இதோ.
வேலை மாற்றியபின் இபிஎஃப் கணக்கை மர்ஜ் செய்வது மிக அவசியம்: முழு செயல்முறை இதோ title=

EPFO Update: தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அவ்வப்போது வேலையை மாறிக்கொண்டே இருப்பார்கள். வேலையை மாற்றும் போது, பணியாளருக்கு அவரது புதிய நிறுவனத்தின் மூலம் ​​ஒரு புதிய இபிஎஃப் கணக்கு திறக்கப்படுகிறது. ஆனால், இதை திறக்கும் போது பழைய யுஏஎன் எண் தான் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பல ஊழியர்களுக்கு UAN பழையதாக இருந்தால், அந்த UAN எண்ணில் இருந்து இயங்கும் இபிஎஃப் கணக்கு ஒரே கணக்காகத்தான் இருக்கும் என்ற தவறான கருத்து உள்ளது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. ஒருவர் வேலையை மாற்றும்போது, அந்த நபரின் இபிஎஃப் கணக்குகளும் தனித்தனியாக திறக்கப்படுகின்றன. இவற்றை ஊழியர் இபிஎஃப்ஓ (EPFO) ​​இணையதளத்திற்குச் சென்று ஒன்றிணைக்க வேண்டும். பணியாளர் கணக்குகளை ஒன்றிணைக்கவில்லை என்றால், அவர் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். இதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

கணக்குகளை இணைக்காததால் ஏற்படும் விளைவுகள் இவை

கணக்குகளை ஒன்றிணைக்காமல் போனால் ஏற்படும் விளைவு என்னவென்றால், புதிய இபிஎஃப் கணக்கைத் (EPF Account) தொடங்குவதால், உங்கள் பழைய கணக்கில் இருக்கும் பணம் ஒன்றாகத் தெரிவதில்லை. இது தவிர, வரி சேமிப்புக் கண்ணோட்டத்திலும் அவற்றை இணைப்பதும் முக்கியமானது. நீங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும்போது, ​​ஐந்து வருட வரம்பு கடைபிடிக்கப்படுகிறது. ஐந்து வருட பங்களிப்புக்குப் பிறகு டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறுவதற்கு வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை.

ஊழியர் இபிஎஃப் (EPF) கணக்குகளை ஒன்றிணைக்கவில்லை என்றால், அவரது ஒவ்வொரு நிறுவனங்களின் கால அளவும் வித்தியாசமாக கணக்கிடப்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பிஎஃப் பணத்தை எடுக்கும்போது, ​​​​ஒவ்வொரு நிறுவனத்தின் காலத்திற்கு ஏற்ப டிடிஎஸ் செலுத்த வேண்டும். ஆனால் கணக்குகளை இணைத்த பிறகு, உங்கள் அனுபவமும் ஒன்றாகக் கணக்கிடப்படும். ஒரு உதாரணத்துடன் இதை புரிந்து கொள்ளலான். ஒரு ஊழியர் மூன்று நிறுவனங்களில் 2 வருடங்கள் வேலை செய்தார் என்று வைத்துக்கொள்வோம். இந்த சூழ்நிலையில், அவரிடம் மூன்று இபிஎஃப் கணக்குகள் உள்ளன என வைத்துக்கொள்ளலாம். இந்தக் கணக்குகளை இணைத்தால், உங்களின் மொத்த அனுபவ எண்ணிக்கை 6 வருடங்களாக இருக்கும். ஆனால் இணைப்பு செய்யப்படாவிட்டால், இவை 2 வருட அனுபவம் கொண்ட வித்தியாசமான கணக்குகளாக கணக்கிடப்படும்.

மேலும் படிக்க | EPF Withdrawal Rules: EPF தொகையில் அட்வான்சாக பணம் பெற முடியுமா? வழிமுறைகள் என்ன?

கணக்குகளை எவ்வாறு இணைப்பது

- முதலில் EPFO ​​இன் உறுப்பினர் சேவை போர்ட்டல் https://unifiedportal-mem.epfindia.gov.in க்குச் செல்லவும்.

- Online Services பிரிவின் கீழ் 'One Member - One EPF Account (Transfer Request)' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தற்போதைய முதலாளியின் கணக்கை வெரிஃபை செய்யவும். 

- இதற்குப் பிறகு, 'கெட் டீடயில்ஸ்' என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் பழைய முதலாளிகளின் பட்டியல் திறக்கும்.

- இங்கே, நீங்கள் மாற்ற விரும்பும் கணக்கைக் கிளிக் செய்யவும்.

- 'Get OTP' என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும், அதை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.

- உங்கள் கோரிக்கை சமர்ப்பிக்கப்படும். உங்கள் தற்போதைய வேலை வழங்குபவர் அதை அங்கீகரிக்க வேண்டும். அதன் பிறகு இபிஎஃப்ஓ (EPFO) ​​உங்கள் பழைய கணக்கை புதிய கணக்கில் இணைக்கும்.

- சிறிது நேரம் கழித்து உங்கள் இணைப்பு நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான ட்விஸ்ட்: 50% டிஏ, ஊதியத்தில் அதிரடி ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News