LIC ஜீவன் சாந்தி... ரூ.10 லட்சம் முதலீட்டில்... வாழ்நாள் முழுவதும் ரூ.9560 பென்ஷன்..!!

LIC New Jeevan Shanti Policy: ஓய்வு காலத்தில் ஒருவரையும் சாராமல் இருக்க, நமது முதலீடுகளை சரியாக திட்டமிடுவது மிகவும் அவசியம். அதற்கு லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) வழ்ங்கும் பாலிஸி திட்டங்கள் பெரிதும் உதவும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2024, 11:01 AM IST
  • எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  • பெரும்பாலானோருக்கு எல்ஐசி என்பது காப்பீடு தொடர்பான திட்டங்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் உள்ளது.
  • வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் ரூ.9,560 ஓய்வூதியமாகப் பெற உதவும் பாலிஸி திட்டம்.
LIC ஜீவன் சாந்தி... ரூ.10 லட்சம் முதலீட்டில்... வாழ்நாள் முழுவதும் ரூ.9560 பென்ஷன்..!! title=

LIC New Jeevan Shanti Policy: ஓய்வு காலத்தில் ஒருவரையும் சாராமல் இருக்க, நமது முதலீடுகளை சரியாக திட்டமிடுவது மிகவும் அவசியம். அதற்கு லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) வழ்ங்கும் பாலிஸி திட்டங்கள் பெரிதும் உதவும். நாட்டின் மிகப்பெரிய அரசுத்துறை காப்பீட்டு நிறுவனமான LIC பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனம். வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், பல திட்டங்களைக் கொண்டு வருகிறது. சில திட்டங்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. நிகழ்காலம் வருங்காலம் இரண்டையும் பாதுகாப்பதற்காக, பலர் காப்பீடு அல்லது வேறு வகையான திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

LIC மற்ற முதலீட்டு விருப்பங்களுடன், நிறுவனம் மிகவும் கவர்ச்சிகரமான ஓய்வூதிய திட்டங்களையும் வழங்குகிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு எல்ஐசி என்பது காப்பீடு தொடர்பான திட்டங்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் உள்ளது. அந்த வகையில், இன்று எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

எல்ஐசி  ஜீவன் சாந்தி வருடாந்திர ஓய்வூதியத் திட்டமாகும். எளிமையான மொழியில், இந்தத் திட்டத்தில் ஒருமுறை பணத்தை முதலீடு (Investment Tips) செய்து வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டத்தில் உங்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

எல்ஐசியின் ஓய்வீதிய பாலிஸி திட்டம் உங்களுக்கு வழக்கமான ஓய்வூதியம் மற்றும் இறப்பு பலன்களை வழங்குகிறது. பாலிசி பிரீமியம் செலுத்திய பிறகு பாலிசிதாரர் இறந்தால், நாமினிக்கு போனஸ் வழங்கப்படும். எனவே, இந்த பாலிஸி மூலம், உங்கள் ஓய்வூதியத்திற்கான வழிகளை ஏற்படுத்திக் கொள்ளும் அதே வேளையில், ​​உங்களை சார்ந்திருப்பவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தையும் வழங்குகிறீர்கள். திட்டத்தில், சிங்கிள் பைஃப் மற்றும் ஜாயிண்ட் லைஃப் பாலிஸி எடுப்பதற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள்.

எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தில் ஒருமுறை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் ரூ.9,560 ஓய்வூதியமாகப் பெறலாம். ரூ.1.5 லட்சம் என்ற அளவில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. இந்தத் திட்டத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க | Post Office FD: ரூ.5 லட்சத்தை 10 லட்சமாக்கும் அஞ்சலக வைப்பு திட்டம்..!!

ஜீவன் சாந்தி திட்டத்தில் முதலீடு செய்ய, உங்கள் வயது குறைந்தது 30 வயதாக இருக்க வேண்டும். அதிகபட்ச யது வரம்பு 80 வயது. அதாவது 30 வயதிலிருந்து 80 வயது வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திரம் உங்களுக்கு  ஏற்ற விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஓய்வூதியத்தை பெறலாம்.

முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், எல்ஐசியின் புதிய வாழ்நாள் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்  ஆகிய இரண்டு முறையிலும் எல்ஐசி நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.  ஆன்லைன் மூலம் திட்டத்தில் சேர எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். ஆஃப்லைன் வழியாக இத் திட்டத்தில் இணைய எல்ஐசி முகவர் உதவியை நாடலாம் அல்லது உங்கள் அருகிலுள்ள எல்ஐசி கிளைக்கு செல்லலாம்.  

மேலும் படிக்க | SCSS Vs மூத்த குடிமக்களுக்கான வங்கி FD... வட்டி வருமானத்தை அள்ளிக் கொடுப்பது எது..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News