அள்ளித்தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்.. டபுள் வருமானம், லிஸ்ட் இதோ..!

Post Office Saving Schemes : பல முதலீட்டுத் திட்டங்கள் அரசாங்கத்தால் தற்போது அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் டபுள் வருமானத்தைப் பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 4, 2024, 12:11 PM IST
  • பல திட்டங்கள் தபால் நிலையம் தற்போது நடத்தி வருகிறது.
  • எதிர்காலத்திற்காக பெரிய தொகையை சேமிக்க உதவுகின்றன.
  • அத்தகைய திட்டங்களைப் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
அள்ளித்தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்.. டபுள் வருமானம், லிஸ்ட் இதோ..! title=

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் / Post Office Saving Schemes : முதலீடு என்பது அனைவரது வாழ்விலும் ஒரு மிக முக்கியமான அம்சமாகும். இதில் ஆண்கள் பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை. அனைவருக்கும் பணத்தை சேமிப்பது போல, பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்து அதை பெருக்குவதும் மிகவும் அவசியம். குறிப்பாக பணத்தை பாதுகாப்பாக வைத்து சிறந்த வருமானத்தை அளிக்கும் முதலீட்டு திட்டங்களையே தேர்ந்தெடுக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். இப்படிப்பட்ட பல திட்டங்கள் தபால் நிலையம் தற்போது நடத்தி வருகிறது. 

இந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்து மூலம் கோடிக்கணக்கான மக்கள் டபுள் வருமானத்தை பெறுகின்றனர். அஞ்சல் அலுவலகத்தில் பாதுகாப்பான வழியில் சிறந்த வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் அனைத்து வகுப்பினருக்குமானது. குழந்தைகள், பெண்கள், ஊழியர்கள், வணிகர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவருக்கும் பிரத்யேகமான திட்டங்களை போஸ்ட் ஆபீஸ் நடத்தி வருகின்றன. அரசின் இந்த திட்டங்கள் சாமானிய மக்கள் எதிர்காலத்திற்காக பெரிய தொகையை சேமிக்க உதவுகின்றன.

இந்நிலையில் நீங்கள் அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது வரிச் சேமிப்புக்கான வேறு ஏதேனும் சேமிப்புத் திட்டத்திலோ முதலீடு செய்ய விரும்பினால் இந்தச் செய்தி உடனே படிக்கவும். எனினும் நல்ல வருமானத்தை தரும் திட்டங்களில் நீங்கள் வரிச் சலுகை பெற முடியாது. அத்தகைய திட்டங்களைப் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்... விதிகள் கூறுவது என்ன..!!

1. மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் - Mahila Samman Savings Card :
மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் 2023 (Mahila Samman Savings Certificate) என்பது பெண்களுக்காக நடத்தப்படும் பிரத்தியேகமான சிறு சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியப் பெண்களிடையே பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டிக்கு வரி பொருந்தும். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழிலிருந்து வரும் வட்டி வருமானம் வரிவிதிப்புக்கு உட்பட்டது. ஒவ்வொரு நபரின் வரி வரம்பு மற்றும் மொத்த வட்டி வருமானத்தைப் பொறுத்து, TDS கழிக்கப்படுகிறது.

2. தேசிய சேமிப்பு நேர வைப்பு கணக்கு - National Savings Time Deposit Account :
ஒன்று, இரண்டு, மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான வைப்பு கணக்குகளை வைப்பாளர்கள் இந்த கணக்கைத் திறக்கலாம். இந்தக் கணக்கில் ஒரு வருடத்திற்கு 6.9% வட்டியும், இரண்டு வருடங்களுக்கு 7.0% மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு 7.1% வட்டியும் ஆகும். வருமான வரிச் சலுகைகள் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் தபால் நிலைய நிலையான வைப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும். வருமான வரிச் சட்டம் 1961ன் கீழ், ஐந்தாண்டு கால வைப்புத் தொகையில் ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற தகுதியுடையவர்கள். 

3. தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு - National Savings Recurring Deposit Account :
அஞ்சல் அலுவலகத்தின் இந்த திட்டத்தில், 5 ஆண்டுகளுக்கு ஆண்டு அடிப்படையில் 6.7% வட்டியைப் பெறுவீர்கள். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் கூட்டு வட்டியின் பலனையும் பெறுவீர்கள். ஒரு நபர் அல்லது அதிகபட்சம் 3 பெரியவர்கள் (Joint A அல்லது Joint B) கணக்கைத் திறக்கலாம். RD வைத்திருப்பவர் ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் ரூ.100 அல்லது ரூ.10 மடங்குகளில் டெபாசிட் செய்ய வேண்டும். 

4. கிசான் விகாஸ் பத்ரா - Kisan Vikas Patra :
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வருமான வரி விலக்கு கிடைக்காது. இதில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான வருடாந்திர வட்டி, 'பிற ஆதாரங்களில் இருந்து வருமானம்' என வரி விதிக்கப்படும். 

5. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் - Post Office Monthly Income Scheme :
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் ரூ.1,500 முதல் அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் 7.4% வட்டியை பெறுவீர்கள், சம்பாதித்த வட்டிக்கு வரி விதிக்கப்படும், மேலும் இது வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வராது. மூத்த குடிமக்களுக்கு, 40,000 மற்றும் 50,000 ரூபாய்க்கு மேல் வட்டியில் TDS கழிக்கப்படும். 

மேலும் படிக்க | PPF: தினம் ரூ.416 சேமித்தால் போதும்... முதிர்வின்போது கையில் ரூ.1.03 கோடி இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News