கடனை செலுத்தாதவர்களுக்கு தனி பட்டியல்: கிடுக்கிப்பிடி போடும் ரிசர்வ் வங்கி.... உஷார்!!

RBI Update: இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது வாடிக்கையாளர்களின் நன்மைக்காகவும், வங்கி செயல்முறையை எளிதாக்கும் நோக்குடனும் பல மாற்றங்களை செய்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 7, 2023, 07:28 PM IST
  • ரிசர்வ் வங்கி ஏன் இந்த விதியை வகுத்தது?
  • இந்த பிரிவில் உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா?
  • பட்டியலில் இருந்து பெயரை நீக்குவது எப்படி?
கடனை செலுத்தாதவர்களுக்கு தனி பட்டியல்: கிடுக்கிப்பிடி போடும் ரிசர்வ் வங்கி.... உஷார்!! title=

RBI Update: நாம் அனைவரும் நமது வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் வாங்குகிறோம். இவற்றால் நமது உடனடி தேவைகள் பூர்த்தி ஆகின்றன. வங்கிகளில் கடன் வாங்கும்போது இருக்கும் பொறுப்பை பெரும்பாலானவர்கள் கடனை திரும்ப செலுத்தும்போது காட்டுவதில்லை. ஆனால், இதை ரிசர்வ் வங்கியும், பிற வங்கிகளும் கண்காணிக்கின்றன. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் நோக்கம், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர்களை ஒரு தனி பிரிவில் வைத்திருப்பதாகும். ரிசர்வ வங்கி இப்படி செய்ய காரணம் என்ன? இந்த பிரிவில் உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? இது பற்றிய அத்தனை விவரங்களையும் இந்த பதிவில் காணலாம். 

இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது வாடிக்கையாளர்களின் நன்மைக்காகவும், வங்கி செயல்முறையை எளிதாக்கும் நோக்குடனும் பல மாற்றங்களை செய்கிறது. சமீப காலங்களில் வாடிக்கையாளர்களின் வசதிகள் மற்றும் நன்மைகளை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி, வங்கி செயல்முறைகளில் பல வித மாற்றங்களை செய்துள்ளது, பல புதிய விதிகளை (RBI Loan Rules) இயற்றியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு முக்கியமான புதுப்பிப்பு தற்போது வந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத (Wilful Defaulters) கடன் பெறுனர்கள் ஒரு தனி பிரிவில் வைக்கப்படுவார்கள் என்று வங்கி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. கூடுதலாக, கடன் வாங்கிய நபர்கள் இது குறித்து வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கடனை செலுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசனை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஜூன் 2023 இல், இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) கூடுதல் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. வேண்டுமென்றே ஒரே நேரத்தில் செய்யப்படும் மொத்த தொகை செட்டில்மென்ட் உயர் அதிகாரியின் அனுமதியுடன் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று வங்கி இந்த சுற்றறிக்கையில் தெரிவித்தது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்: 2024-க்கு முன் பெரிய தொகை கணக்கில் வரும், இதுதான் காரணம்

ரிசர்வ் வங்கி ஏன் இந்த விதியை வகுத்தது?

கடனை திருப்பி செலுத்தாத நபர்களுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியது. இந்த சுற்றறிக்கையின் நோக்கம், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களை ஒரு தனி பிரிவில் வைத்திருப்பதாகும். அத்தகைய சூழ்நிலையில், சரியான நேரத்தில் கடனை செலுத்துபவர்களுக்கு நியாயம் கிடைக்கும். இது தவிர, வங்கிகள் கடன் வழங்குவதற்கு வெளிப்படையான செயல்முறையை பின்பற்ற வேண்டும் என்பதில் ரிசர்வ் வங்கி அதிக கவனம் செலுத்துகிறது.

பட்டியலில் இருந்து பெயரை நீக்குவது எப்படி?

கடன் வாங்கியவர் சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அவரது பெயர் டீஃபால்டர் பட்டியலில் இருக்கும். இந்த பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட வேண்டுமானால், கடன் வாங்கியவர் வங்கியிடம் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இது தவிர, கடன் வாங்கியவர் ஒப்பந்தத்தின் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். கடன் வாங்கியவர் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் வங்கி கடுமையான நடவடிக்கையை எடுக்கலாம்.

கடனைத் திருப்பிச் செலுத்தாதவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிறகு, கடன் வாங்கியவர் தனது பெயரை அந்த பட்டியலில் இருந்து நீக்க, ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படும். அவ்வாறு செய்யாவிட்டால், வங்கி கடும் நடவடிக்கையை எடுக்கக்கூடும்.

மேலும் படிக்க | ஹஜ் உம்ரா விசாவில் மாற்றமா? 6 நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு NO Tourist VISA!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News