Bank Holidays: அடுத்த வாரம் 5 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை! முழு விவரம்!

Bank Holidays: சில மாநிலங்களில் வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி சம்பந்தப்பட்ட பணிகள் இருந்தால் முன்கூட்டியே முடிப்பது நல்லது.

Written by - RK Spark | Last Updated : Apr 8, 2024, 06:19 AM IST
  • ஏப்ரலில் நிறைய பொதுவிடுமுறைகள் உள்ளன.
  • ரம்ஜான், தமிழ் புத்தாண்டு விடுமுறைகள் வர உள்ளது.
  • இந்த தேதிகளில் வங்கிகளும் மூடப்பட்டு இருக்கும்.
Bank Holidays: அடுத்த வாரம் 5 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை! முழு விவரம்! title=

Bank Holidays: வங்கிகள் தொடர்பான பணிகளை மேற்கொள்பவர்களுக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.  அடுத்த வாரத்தில் வங்கிகள் ஐந்து நாட்கள் மூடப்பட்டு இருக்கும்.  விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வங்கிகள் ஐந்து நாட்களுக்கு விடுமுறையில் இருக்கும்.  இந்த விடுமுறை சில மாநிலங்களில் மட்டுமே அமலில் இருக்கும்.  ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட அனைத்து தேசிய வங்கிகளும் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) குடி பத்வா, உகாதி மற்றும் தெலுங்கு புத்தாண்டு, புதன்கிழமை (ஏப்ரல் 10) போஹாக் பிஹு மற்றும் ஈத் ஆகிய ஐந்து நாட்களுக்கு மூடப்படும். வியாழன் (ஏப்ரல் 11) ஈத், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 13) இரண்டாவது சனிக்கிழமை மற்றும் (ஏப்ரல் 14) ஞாயிறு விடுமுறை.

மேலும் படிக்க | அப்பாவுக்கு தப்பாத அனில் அம்பானி மகன்கள்! சொகுசு விமானம், கார்கள் என மலைக்க வைக்கும் செலவுகள்

ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் முறையே போஹாக் பிஹு மற்றும் ராம நவமிக்கு சில மாநிலங்களில் வங்கிகள் விடுமுறையில் இருக்கும்.  ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ளூர் விடுமுறைகள் வருவதால் வாடிக்கையாளர்கள் குழப்பம் மற்றும் சிரமத்தைத் தவிர்க்க, உள்ளூர் மற்றும் மாநில விடுமுறைகளை தெரிந்து கொள்ள தங்களுக்கு அருகிலுள்ள வங்கிக் கிளைகளுக்கு நேரில் சென்று பார்க்கலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணைப்படி, பொது விடுமுறைகள், மாநில விடுமுறைகள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் போன்ற ஒவ்வொரு விடுமுறைக்கு மாநிலத்தில் உள்ள நிலைமைகளைப் பொறுத்து ஏப்ரல் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஏப்ரல் மாதத்தில் வங்கி விடுமுறைகள்

ஏப்ரல் 9 வங்கி விடுமுறை: மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மணிப்பூர், கோவா, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகள் குடி பத்வா/உகாதி பண்டிகை/தெலுங்கு புத்தாண்டு தினம்/சஜிபு நோங்மபான்பா/1வது நவராத்ராவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 10 வங்கி விடுமுறை: திரிபுரா, அசாம், மணிப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் போஹாக் பிஹு/செய்ரோபா/பைசாகி/பிஜு பண்டிகைகள் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15 வங்கி விடுமுறை: போஹாக் பிஹு மற்றும் ஹிமாச்சல் தினம் காரணமாக அஸ்ஸாம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16 வங்கி விடுமுறை: ராம நவமியையொட்டி, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சண்டிகர், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20 வங்கி விடுமுறை: கரியா பூஜை பண்டிகைக்காக திரிபுராவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை (ஏப்ரல் 13) மற்றும் நான்காவது சனிக்கிழமை (ஏப்ரல் 27) அன்று வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். அதேபோல ஏப்ரல் 7, 14, 21 மற்றும் 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் எப்போதும் போல வங்கிகள் விடுமுறையில் இருக்கும்.

மேலும் படிக்க | SBI சர்வோத்தம் FD திட்டம்... 7.9% கூட்டு வட்டியின் பலன்கள்... மிஸ் பண்ணாதீங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News