கிரெடிட் கார்டு தொடர்பான விதிகளை மாற்றியுள்ள ஆர்பிஐ! புதிய விதிகள் அமல்!

New Credit Card Rules: ஆர்பிஐ கிரெடிட் கார்டு தொடர்பான விதிககளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.  இதன் மூலம் பில்லிங் தேதிகளில் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : Apr 1, 2024, 07:08 AM IST
  • கிரெடிட் கார்டு புதிய விதிகள்.
  • பில்லிங் தேதிகளை மாற்றி கொள்ளலாம்.
  • இதன் மூலம் அபராதங்களை தவிர்க்கலாம்.
கிரெடிட் கார்டு தொடர்பான விதிகளை மாற்றியுள்ள ஆர்பிஐ! புதிய விதிகள் அமல்! title=

New Credit Card Rules: இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு தொடர்பான விதிகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு பில்லிங் சுழற்சியில் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.  இந்த புதிய விதியின் மூலம் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் அவர்களின் வசதிக்கேற்ப எத்தனை முறை வேண்டும் என்றாலும் பில்லிங் தேதியை மாற்றி கொள்ள அனுமதிக்கிறது. இது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் விதிக்கப்பட்ட விதிகளில் இருந்து மாறுபடும். பொதுவாக ஒரு கிரெடிட் கார்டின் பில்லிங் சுழற்சி ஒரு மாதத்தின் 7 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை இருக்கும். இந்த காலகட்டத்தில், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் மொத்தமாக கணக்கிடப்படும்.  பில்லிங் சுழற்சி 27 முதல் 31 நாட்கள் வரை இருக்கலாம். மேலும் கிரெடிட் கார்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மேலும் படிக்க | Youtube: யூடியூபில் லட்ச லட்சமாக பணம் சம்பாதிப்பது எப்படி? ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!

பில்லிங் சுழற்சியில் மாற்றம்

இந்த புதிய வசதிகளை பெற, வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் கிரெடிட் கார்டில் உள்ள பழைய நிலுவை தொகைகளை செலுத்த வேண்டும். இவற்றை செய்து முடித்தவுடன் வங்கிகளால் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண், மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்கள் பில்லிங் சுழற்சியை மாற்றுவதற்கான கோரிக்கையை முன்வைக்கலாம். இந்த புதிய நடைமுறை வாடிக்கையாளர்கள் தங்கள் நிதித் தேவைகளுக்கு ஏற்றவாறு பில்லிங் தேதிகளை மாற்றி அமைக்க உதவுகிறது.

புதிய கிரெடிட் கார்டு விதியின் நன்மைகள்

பில்லிங் தேதியை மாற்றும் அம்சங்கள் கொண்ட கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.  பில் செலுத்தும் தேதியைத் தேர்ந்தெடுக்க இந்த புதிய விதிகள் வாடிக்கையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன் மூலம் அவர்களின் சம்பள தேதி அல்லது பண வரவை வைத்து பில்லிங் தேதிகளை மாற்றி கொள்ள முடியும். மேலும் பில்லிங் தேதியை மாற்றுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளில் வட்டி இல்லாத காலத்தை அதிகப்படுத்தலாம். இதன் மூலம் தேவையில்லாத அபராத தொகை கட்டுவதை நிறுத்த முடியும்.  இந்த புதிய நடைமுறை பல புதிய கிரெடிட் கார்டு பயனர்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய கடன் விதிகள்

முன்னதாக, ஒவ்வொரு கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பில்லிங் தேதிகளை ஒருதலைப்பட்சமாக முடிவு செய்தன.  இது பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதியின்படி, வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பங்கள் மற்றும் பண வரவை வைத்து எத்தனை முறை வேண்டும் என்றாலும் தங்கள் பில்லிங் தேதிகளை மாற்றி கொள்ள முடியும்.  இந்த புதிய விதிகள் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியை அதிகரிக்கிறது. மேலும் இந்த புதிய விதி கிரெடிட் கார்டு பயனர்கள் தங்கள் பில்களில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவதைத் தவிர்க்க ஒரு நினைவூட்டலாகவும் செயல்படுகிறது. குறைந்தபட்ச கட்டணத்தைத் தேர்ந்தெடுப்பது, நிலுவையில் உள்ள நிலுவைத் தொகைக்கு வட்டியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த பரிவர்த்தனைகளுக்கான வட்டி இல்லாத காலத்தையும் நிராகரிக்கிறது. 

இந்த அபாயங்களைக் தவிர்க்க, நிதி வல்லுநர்கள் முழு கிரெடிட் கார்டு பில்லையும் உரிய தேதிக்குள் முழுமையாக செலுத்த பரிந்துரைக்கின்றனர். பில்லிங் சுழற்சியை மாற்றுவது கிரெடிட் கார்டு பில் செலுத்த வேண்டிய தேதியில் தொடர்புடைய சரிசெய்தலையும் உள்ளடக்குகிறது. இந்த திருத்தப்பட்ட காலக்கெடு பொதுவாக பில்லிங் தேதியிலிருந்து 15 முதல் 20 நாட்களுக்குள் வரும், வாடிக்கையாளர்களுக்கு 45 முதல் 50 நாட்கள் வரையிலான வட்டியில்லா கால நீட்டிப்பை வழங்குகிறது. இந்த காலக்கெடுவிற்குள், வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டு பில்களை எந்தவித கூடுதல் கட்டணங்களும் இல்லாமல் செலுத்தாமல்.

மேலும் படிக்க | Investment Schemes for Women: பெண்கள் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News