வேலைநிறுத்ததிற்கு பிறகு வெளியாகும் முதல் படம் மெர்க்குரி!!

திரையுலகினரின் வேலைநிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ், இயக்கத்தில் உருவான மெர்க்குரி படம் வெளியாகும் என நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.

Last Updated : Apr 19, 2018, 09:12 AM IST
வேலைநிறுத்ததிற்கு பிறகு வெளியாகும் முதல் படம் மெர்க்குரி!! title=

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஏப்.19) முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் கூறினார்.

முதலாவதாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள 'மெர்க்குரி' படம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 1 முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 48 நாட்களாக புதிய படங்கள் எதுவும் திரைக்கு வெளியாகவில்லை, மேலும் அனைத்து படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. 

திரைப்பட தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன், தியேட்டர்களில் கூட்டம் இல்லை. இந்நிலையில் இதற்கு தீர்வு காண்பதற்காக நேற்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால்.....!

தமிழ் சினிமா, கடந்த 45 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. அரசின் தலையீட்டால் இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துள்ளது. படங்களின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் கூடி விவாதித்து படங்களின் ரிலீஸை அறிவிக்க உள்ளது.

சினிமாத்துறை முழுக்க வெளிப்படைத்தன்மைக்கு வரும் நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை கணினி மூலமாகவே நடைபெறும். மேலும், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் இனிமேல் வசூலிக்கப்பட மாட்டாது. 

திரையரங்குகளுக்கு வரும் மக்களுக்கு எளிதாக இருக்கும் வகையில், படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றவர்.

இது குறித்து நடிகர் விஷால் தன் டுவிட்டரில் கூறிப்பிட்டுள்ளதாவது;- திரையுலகினரின் வேலைநிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ், இயக்கத்தில் உருவான மெர்க்குரி படம் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்

மெர்க்குரி படம் ஏற்கனவே தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ரிலீஸாகிவிட்டது. படம் வெளியான உடனேயே பைரஸியும் வந்துவிட்டதால் மெர்க்குரி படம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. 

அதை தடுக்கும்பொருட்டு மெர்க்குரி படத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளாதாக அவர் தெரிவித்துள்ளார்.

Trending News