ரஷ்யாவிற்கு ரயிலில் புறப்பட்ட கிம் ஜாங் உன்... ரயிலில் இத்தனை வசதிகளா..!!

வடகொரிய சர்வாதிகாரி ரயிலில் ரஷ்யா புறப்பட்டார். எதற்கு ரயில்  பயணம் என பல வகையான கேள்விகள் உங்கள் மனதில் எழக் கூடும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 8, 2023, 04:58 PM IST
  • ஆடம்பர ரயிலில் உள்ள ரயில் நடத்துனர்கள் அனைவரும் அழகான பெண் நடத்துனர்கள்.
  • ரயிலில் நிபுணத்துவம் பெற்ற சமையல்காரர்.
  • ரயிலில் கடல்வாழ் உயிரினங்களுக்கு தனி பெட்டி.
ரஷ்யாவிற்கு ரயிலில் புறப்பட்ட கிம் ஜாங் உன்...  ரயிலில் இத்தனை வசதிகளா..!! title=

Special Features in Kim Jong Un's Train  : கிம் ஜாங் உன்னுக்கு பல அடையாளங்கள் உள்ளன. உலகம் அவரை சர்வாதிகாரி, ஃப்ரீக், லிட்டில் ராக்கெட் மேன் என்று அழைக்கிறது. உண்மையில் இதற்குப் பின்னால் உள்ள காரணமும் சிறப்பு. அவர் யாரையாவது கொல்ல வேண்டும் என நினைத்தால், உடனே கொன்று விடுவார். அவரை எதிர்த்து யாராலும் பேச வேண்டும் என நினைத்தாலே மரன தண்டனை தான். அவர் தான் விரும்பும் போதெல்லாம், அவர் ஒரு ஏவுகணை சோதனை நடத்துகிறார். இந்நிலையில், அவர் ரயிலில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது பேசு பொருளாக ஆகியுள்ளது.  அவர் ரயிலில் ரஷ்யா சென்று,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்கிறார். அவரிடம் விமானம் இருக்கும் போது ஏன் ரயிலில் செல்ல வேண்டும் என்பது தான் இப்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ள கேள்வி.

கிம் ஜாங் உன் ஆபத்தான நபராக தன்னைக் காட்டிக் கொண்டாலும், அவர் விமானத்தைக் கண்டு பயப்படுகிறார் என கூறப்படுகிறது. அதனால் தான் விமானத்தை தவிர்த்து ரயிலில் பயணம் செய்வார். ரயில் என்பது சாதாரண ரயில் அல்ல. அது அனைத்து ஆடம்பர வசதிகளையும், சிறப்பு அமசங்களையும் கொண்ட பிரத்யேக ரயில். உண்மையில் இந்த ரயில் கிம் ஜாங் இல் பயனபடுத்திய ரயில். அவரது தந்தை கிம் ஜாங்கிடமிருந்து பெறப்பட்டது. அதன் பாரம்பரிய ரயிலின் சிறப்பு பற்றி அறிந்து கொள்வோம்.

கிம் ஜாங் உன்னின் ரயிலின் சிறப்பு

1. கிம் ஜாங் உன் மாஸ்கோவிற்கு ரயிலில் செல்வார், அதன் சராசரி வேகம் மணிக்கு 37 மைல்கள்.

2. இந்த ரயிலில் மாநாட்டு அறை, செயற்கைக்கோள் தொலைபேசி, பிளாட் ஸ்கிரீன் டிவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

3. ஓய்வு எடுக்கவும், ஆடம்பர  வசதிகள் கொண்ட படுக்கை அறைகள் உள்ளன. 

4. இதில் சுமார் 100 பாதுகாப்பு முகவர்கள் பணியமர்த்தப்படுவார்கள், அவர்களின் வேலை ரயில் பாதை மற்றும் வரவிருக்கும் நிலையங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதாகும்.

மேலும் படிக்க | சுத்தமான எரியாற்றலை கொடுக்கும் ‘செயற்கை சூரியனை’ உருவாக்கி வரும் சீனா!

5. வழியில் வெடிகுண்டு தாக்குதல்கள் அல்லது பிற ஆபத்துகள் தவிர்க்கப்படுவதை பாதுகாப்பு முகவர்கள் உறுதி செய்கிறார்கள்.

6. ரயில் முற்றிலும் குண்டு துளைக்காதது மற்றும் எந்த ஆயுதத்தாலும் பாதிக்கப்படாது.

7. ரயிலில் கடல்வாழ் உயிரினங்களுக்கு தனி பெட்டி

8. ரயிலில் அழகான பெண் கண்டக்டர்

9. ரயிலில் நிபுணத்துவம் பெற்ற சமையல்காரர்

கொரிய, ஜப்பானிய, சீன மற்றும் பிரஞ்சு உணவுகளை தயாரிக்கும் சமையல்காரர்கள்

ரயிலில் கான்டினென்டல் உணவு நிபுணர்கள் உள்ளனர், அதாவது கொரிய, ஜப்பானிய, சீன மற்றும் பிரஞ்சு உணவுகளை தயாரிக்கும் சமையல்காரர்கள். உயிருள்ள கடல்வாழ் உயிரினங்களும் அந்த ரயிலில் ஏற்றிச் செல்லப்படுவது மிகப்பெரிய விஷயம். ரஷ்ய அதிகாரி கான்ஸ்டன்டின் புலிகோவ்ஸ்கி, கிம் ஜாங் உன்னின் தந்தையைப் பற்றி கூறிய போது, ஒருமுறை அவருக்கு ரஷ்ய உணவு பரிமாறப்பட்டது. ஆனால் அவர் அதில் குறைபாடுகளை மட்டுமே கண்டார். அவர் ஒரு துண்டை எடுத்து,  இன்னும் வேகவைத்திருக்கலாம் என்று குறை கூறினார் என்றார். 

அழகான பெண் நடத்துனர்கள்

ஆடம்பர ரயிலில் உள்ள ரயில் பெண் நடத்துனர்கள் அனைவரும் அழகான பெண் நடத்துனர்கள். ரயிலைப் பாதுகாக்க, ஒரு ரயில் முன்னால் சென்று கொண்டிருக்கும். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அவர் விளாடிவோஸ்டாக்கை அடையலாம் என்று கூறப்படுகிறது. அங்கிருந்து அவர் பியர் 33 மற்றும் மாஸ்கோவிற்கு மேலும் பயணிக்கலாம் என் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | உலகை அச்சுறுத்தும் அணு ஆயுதப் போரின் ஆபத்து: கிம் ஜாங் உன் உத்தரவால் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News