MK Stalin: “வரி அல்ல-வழிப்பறி” GST குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்!

MK Stalin Tweet : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜி.எஸ்.டி வரி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Apr 15, 2024, 02:06 PM IST
  • ஜி.எஸ்.டி குறித்து பதிவை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
  • அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?
  • 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகிறது
MK Stalin: “வரி அல்ல-வழிப்பறி” GST குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்! title=

MK Stalin Tweet : “ஜிஎஸ்டி வரி அல்ல, வழிப்பறி” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் 2024:

தமிழகத்தில், வரும் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை தாக்கல் செய்து, தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டிருக்கின்றன. தேர்தல் பிரச்சாரங்களையும் அனைத்து கட்சிகளும் தமிழகத்தின் அனைத்து மூலைகளிலும் சென்று நடத்தி வருகிறது. ஒரு புறம், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்து ரோடு ஷோக்களில் பங்கேற்க, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டார். இதில், கோவை பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இப்படி தேர்தல் களம் கடந்த சில நாட்களாக பரபரப்பாகியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் INDIA கூட்டணிக்கு வாக்களிக்குமாறு, மக்களிடம் வலியுறுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஜி.எஸ்.டி குறித்த பதிவினை அவர் வெளியிட்டிருக்கிறார்.

அவர், தனது ட்வீட்டர், “அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?” என்றும் குறிபிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்... தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல் மக்கள்!

“அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?”

முதல்வர் ஸ்டாலின், தனது ட்விட்டர் எக்ஸ் பதிவில், பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:

“தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்!

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். 

#Vote4INDIA:

ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அதில் 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுவதாக கூறியிருக்கிறார். மேலும், வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைப்பதாகவும், இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள் என்றும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறா. “ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற #Vote4INDIA!” என்று இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமி பிரதமராக வாய்ப்பு உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News