எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை... நீலகிரி இ-பாஸ் குறித்த முக்கிய அப்டேட்...!

நீலகிரிக்கு இ பாஸ் நடைமுறையில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை எத்தனை பேர் வருகிறார்கள் எத்தனை வாகனங்கள் செல்கிறது என்பதை கண்காணிக்கவே இந்த நடைமுறை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறியுள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 10, 2024, 01:42 PM IST
  • ஆன்லைன் மூலம் இ-பாஸ் நடைமுறை.
  • வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக வந்த தகவல்.
  • நீலகிரி மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை.
எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை... நீலகிரி இ-பாஸ் குறித்த முக்கிய அப்டேட்...! title=

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லக்கூடிய அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் இ பாஸ் கட்டாயம் என்ற விதிமுறை கடந்த ஏழாம் தேதி முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. நீலகிரிக்கு சுற்றுலா செல்லக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் இ பாஸ் உள்ளதா என்பதை கண்காணிக்க கல்லார் பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனை செய்த பின்பே நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற நீலகிரி சுற்றுலா (Nilgiri Tourism) தளத்தில் இன்று மலர் கண்காட்சி துவங்க உள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் (Tourism) இதில் பங்கேற்பார்கள் என்பதால் தமிழ்நாடு தலைமை செயலாளர் இந்த நிகழ்வில் இன்று பங்கேற்கிறார். இதற்காக நீலகிரி மாவட்டம் செல்வதற்காக மேட்டுப்பாளையம் வந்த தலைமைச் செயலாளர் கல்லார் பகுதியில் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சோதனை செய்ய ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனை சாவடியில் அவர் ஆய்வு செய்தார். 

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அளித்த பேட்டி

சுற்றுலா பயணங்களுக்கு எளிதில் பாஸ் கிடைக்க (E-Pass) என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது மற்றும் வாகன நெரிசல் எந்த அளவுக்கு உள்ளது என்பதை குறித்து அவர் ஆய்வு செய்து கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இது குறித்த பல விஷயங்களை தெளிவுபடுத்தினார்.

ஆன்லைன் மூலம் இ-பாஸ் நடைமுறை

இந்த ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை நீலகிரி மாவட்டத்தில் மிகவும் எளிமையாக செயல்படுத்தி உள்ளதாக தெரிவித்தார் திடீரென சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள் கூட எளிதில் இந்த இ-பாசை பதிவு செய்யும் அளவுக்கு ஆன்லைன் மூலம் இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் படிக்க | கரூரில் கடும் வெப்ப அலை... மதிய நேர வேலைக்கு விலக்கு அளிக்க கோரிக்கை..!!

வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக வந்த தகவல்

மேலும் இந்த இ-பாஸ் நடைமுறைக்கு நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் பதில் அளித்த அவர், இ பாஸ் நடைமுறையை அதற்காகத்தான் எளிமைப்படுத்தி உள்ளதாகவும் யாரும் அப்ரூவல் கொடுத்து இ பாஸ் கொடுக்கப்படுவதில்லை எனவும் கூறினார். 

அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும்

சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலே உடனடியாக அவர்களுக்கு இ பாஸ் கிடைக்கும் எந்தவித கட்டுப்பாடுகளும் இதில் விதிக்கப்படவில்லை. எனவே நீலகிரிக்கு எத்தனை பேர் வருகிறார்கள் எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதற்காகவே இந்த நடைமுறை. இதற்காக யாரும் அச்சப்பட தேவையில்லை அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும். அனைவரும் சுற்றுலா செல்லலாம். எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

கடந்த 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது மே 7-ந்தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அதனை அடுத்து இ-பாஸ் முறையை அமல்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து, இ-பாஸ் பெறுவதற்கான தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. 

மேலும் படிக்க | வாக்கு எண்ணிக்கை மையத்தில் செயல்படாத சிசிடிவி..பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News