ராகு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அற்புதமான பொற்காலம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

Rahu Peyarchi Palangal: மீனத்தில் ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் இதனால் அதிகப்படியான நற்பலன்களை அனுபவித்து வருகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 17, 2024, 03:17 PM IST
  • மீனத்தில் ராகுவின் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் பல நல்ல பலன்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
  • அடுத்த ஆண்டு வரை இது தொடரும்.
  • இந்த காலம் அவர்களுக்கு மிக சாதகமாக இருக்கும்.
ராகு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அற்புதமான பொற்காலம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள் title=

Rahu Peyarchi Palangal: வேத ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளில் இவற்றால் சுப பலன்கள் ஏற்படும். சில ராசிகளுக்கு பிரச்சனைகளை சந்திகக் வேண்டிய நிலை உருவாகும்.

ஒன்பது கிரகங்களில் ராகு கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. நிழல் கிரகமாக இருந்தாலும், அது மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் அச்சப்படுவதை போல, ராகு-கேதுவின் மாற்றம் எப்போதும் அசுப பலன்களை மட்டுமே தருவதில்லை. இவற்றின் மாற்றத்தால் சிலருக்கு சுப பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். சில நேரங்களில் இந்த கிரகங்களின் மாற்றம் சில ராஜயோகங்களையும் உருவாக்குவதுண்டு. 

ஒருவரது ஜாதகத்தில் ராகு அசுப நிலையில் இருந்தால் அந்த நபர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் ராகு சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் தன் வாழ்வில் பல வித நல்ல பலன்களை அடைகிறார். ராகுவின் அருள் மனிதர்களின் வாழ்வை நல்ல நிலையில் மாற்றுகின்றது. ராகு ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் இருக்கிறார். அதன் பிறகு அவர் அடுத்த ராசிக்கு மாறுகிறார். ராகுவும் கேதுவும் எப்போதும் தலைகீழ் இயக்கத்தில் பயணிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராகு பெயர்ச்சி பலன்கள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2023 அக்டோபர் 30 அன்று, ராகு மேஷ ராசியிலிருந்து விலகி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இப்போது 18 மே 2025 வரை அவர் மீனத்தில் இருப்பார். இதன் பின் மீன ராசியை விட்டு கும்ப ராசிக்குள் நுழைவார். மீனத்தில் ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் இதனால் அதிகப்படியான நற்பலன்களை அனுபவித்து வருகிறார்கள். மே 2025 வரை தொடர்ந்து அனுபவிப்பார்கள். இவர்களுக்கு செல்வம் பெருகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம் (Taurus)

மீனத்தில் ராகுவின் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் பல நல்ல பலன்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு வரை இது தொடரும். இந்த காலம் அவர்களுக்கு மிக சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் ரிஷப ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தையும் செழிப்பையும் பெறுவார்கள். நிதி நிலை மிக நன்றாக இருக்கும். வாகன வசதி பெருகும், நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும், சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

மேலும் படிக்க | குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் கோடீஸ்வர யோகம், சுகபோகம்!

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சியால் மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மிதுன ராசிக்காரர்களுக்கு செலவுகள் கூடும். ஆனால் இவை சுபச்செலவுகளாகவே இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். மொத்தத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு ராகுவின் தாக்கம் நன்றாகவே இருக்கும்.

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மீனத்தில் ராகுவின் பெயர்ச்சி பல நல்ல வாய்ப்புகளை அள்ளித்தரும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் , அமைதியும் இருக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இது மூலதன முதலீடுகளுக்கு சிறந்த நேரமாக இருக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜூன் 30 முதல் சனியின் மிகப்பெரிய நிகழ்வு, இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News