சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், அள்ளிக்கொடுப்பார் சனி

Sani Vakra Peyarchi: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 2, 2024, 12:56 PM IST
  • மீன ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சியால் முதலீடு தொடர்பான வேலைகளில் முன்னேற்றம் காண்பார்கள்.
  • பழைய மற்றும் புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
  • சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் அபரிமிதமான பண வரவு இருக்கும்.
சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், அள்ளிக்கொடுப்பார் சனி title=

Sani Vakra Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், அனைத்து ராசிகளிலும் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். 

சனியின் அனைத்து மாற்றங்களும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. சனியின் ராசி மாற்றம் சனி பெயர்ச்சி என அழைக்கப்படுகின்றது. இது தவிர நட்சத்திர பெயர்ச்சி, உதய, அஸ்தமன நிலைகள். வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இன்னும் பல வித மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தின் தாக்கமும் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படுகின்றன. சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் அவர் ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணிக்கு கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். நவம்பர் 15 அன்று சனி வக்ர நிவர்த்தி அடைவார். 

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம். 

கன்னி (Virgo)

சனி வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை ஆளிக்கும். இந்த ராசிக்காரர்கள் பல இடங்களில் இருந்து அபரிமிதமான செல்வத்தைப் பெற வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றமும் ஏற்படக்கூடும், ஆனால் இது அவர்களின் பதவி உயர்வுடன் சேர்ந்து நடக்கும். ஊதிய உயர்வும் கிடைக்கும். இது அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு இருக்கும். அரசியலுடன் தொடர்புடையவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்கலாம்.

மேலும் படிக்க | சங்கடம் தீர்க்கும் சனி ஜெயந்தி... சனி பகவானின் மனம் குளிர செய்ய வேண்டியவை!

துலாம் (Libra)

சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். செல்வம் அதிகரிக்கும். அது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். வக்கிர சனியின் தாக்கத்தால் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் முடிவடையும். தொழிலதிபர்கள் வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலத்தில் லாபம் அதிகரிக்கும். பயிற்சித் தொழிலில் தொடர்புடையவர்கள் துரித வேகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். குறிக்காக பெண் தொழிலதிபர்கள் லாபம் அடைவார்கள்.

மீனம் (Pisces)

மீன ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சியால் முதலீடு தொடர்பான வேலைகளில் முன்னேற்றம் காண்பார்கள். பழைய மற்றும் புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் அபரிமிதமான பண வரவு இருக்கும். வீடு, வாகனம், மனை, கடை வாங்க கடன் கிடைக்காதவர்களுக்கு இப்போது எளிதில் கடன் கிடைக்கும். மீன ராசி மாணவர்களுக்கு, வக்ர சனியின் தாக்கத்தால் வெளிநாட்டில் படிக்கும் ஆசை நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News