12 ஆண்டுக்குப் பிறகு புதன் மற்றும் குரு சேர்க்கை, இந்த ராசிகளுக்கு பொன்னான காலம்

Conjunction Of Mercury and Jupiter : மேஷ ராசியில் குரு மற்றும் புதன் சேர்க்கையானது சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும், பொன்னான நாட்கள் ஆரம்பிக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 18, 2024, 01:37 PM IST
  • நிதி நிலையில் மும்பை விட வலுவாக இருக்கும்.
  • வியாபாரிகள் தொழிலில் நல்ல வளர்ச்சியைப் பெறுவார்கள்.
  • சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு பெறலாம்.
12 ஆண்டுக்குப் பிறகு புதன் மற்றும் குரு சேர்க்கை, இந்த ராசிகளுக்கு பொன்னான காலம் title=

Mercury and Jupiter Conjunction 2024 Horoscope : வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் 27 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இது மனித வாழ்விலும், நாடு மற்றும் உலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது புதன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 26 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த மேஷ ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இதன் காரணமாக வருகிற மார்ச் 26 ஆம் தேதி மேஷ ராசியில் குரு மற்றும் புதன் சேர்க்கை உருவாகும். அத்தகைய சூழ்நிலையில், இந்த சேர்க்கை அனைத்து ராசிகளையும் ஏதேனும் ஒரு விதத்தில் பாதிக்கும். ஆனால் நான்கு ராசிக்காரர்களுக்கு மட்டும் குரு மற்றும் புதனின் சேர்க்கையானது சிறப்பு ஆசிகளைப் பெறுவார்கள். மேலும், இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். இந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...

மேஷம் (Aries Zodiac Sign)
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் குரு சேர்க்கையால் வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். சிறந்த முடிவுகளை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கை மிகவும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். அதனுடன் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். தொழிலில் வெற்றி மழை வீசும். நிதி நிலையில் மும்பை விட வலுவாக இருக்கும். 

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க... உங்கள் ராசிக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுங்க!

கடகம் (Cancer Zodiac Sign)
கடக ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் குரு சேர்க்கையால் தொழிலில் நல்ல லாபத்துடன் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கலாம். கடின உழைப்புக்கான முழுமையான பலன் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். அரசு வேலையில் இடமாற்றம் கிடைக்கலாம். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை மும்பை விட சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் தொழிலில் நல்ல வளர்ச்சியைப் பெறுவார்கள். முக்கியமாக பணப் பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலையில் நல்ல ஏற்றம் காணப்படும்.

துலாம் (Libra Zodiac Sign)
துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் குரு சேர்க்கையால் லாபகரமான பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். வெளிநாட்டில் நல்ல வேலை வாய்ப்பை பெறுவீர்கள். புதிய வேலை அல்லது புதிய தொழிலை தொடங்கலாம். நல்ல வெற்றி கிடைக்கலாம். குடும்பத்தினருடனான உறவு மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடனும், ஆனந்தமாகவும் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Weekly Horoscope: இந்த வாரத்திற்கான உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News