சுக்கிரன் பெயர்ச்சி... உடல் - மன நல பிரச்சனைகள் அதிகரிக்கும்... ரொம்ப கவனமா இருங்க!

Sukran Peyarchi 2024: ஆடம்பர வழக்கை, செல்வம் ஆகியவற்றை அள்ளித் தரும் சுக்கிரன் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடும் என்றாலும், சில ராசிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

சுக்கிரன் வருகிற ஏப்ரல் 24ம் தேதி பெயர்ச்சி ஆகிறது. எனவே மேஷ ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /7

Sukran Peyarchi 2024 Effects: சுக்கிரன் கிரகம் ஏப்ரல் 24ம் தேதி காலை 11:44 மணிக்கு மேஷ ராசியில்சஞ்சரிக்க போகிறார். ஆடம்பர வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிக்கும் செல்வத்திற்கும் காரணமான கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறார். ஆனால் இந்த முறை சுக்கிரன் மேஷ ராசியில் சஞ்சரிப்பதால் 5 ராசிக்காரர்களுக்கு உடல் நலன், மன நல பிரச்சனைகள் அதிகரிக்க போகிறது. 

2 /7

ரிஷபம் ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் அதிகரிப்பதால்,  மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில், சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும். முடிந்தவரை மன அழுத்தத்திலிருந்து விலகி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

3 /7

மிதுன ராசிக்காரர்கள் தற்சமயம் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.  நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரித்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள். உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை தவறாமல் செய்வது நல்லது.

4 /7

கன்னி ராசியினருக்கு உடல் பிரச்சனைகள் அதிகரிக்கும். அதனால், உடல்நிலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எனவே, முடிந்தவரை சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளித்து, நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள். இந்த நேரத்தில் உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும். கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் உடல் மற்றும் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

5 /7

விருச்சிக ராசிக்காரர்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் சில மன ரீதியான பிரச்சனைகளும் இருக்கலாம். எனவே மன அழுத்தத்தை தவிர்க்கவும். மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். யோகா மற்றும் தியானம் செய்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

6 /7

மகர ராசிக்காரர்கள் தங்கள் சொந்த ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உணர்ச்சி வசப்படுவதால் மனநல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும். மேலும், தியானம், யோகா மற்றும் மனதிற்கு இதம் தரும் இயற்கை சூழ்நிலையில் நேரத்தை செலவிடுவது உங்களுக்கு மிகவும் நல்லது.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.