ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரை சேர்க்க இந்த ஆவணங்கள் கண்டிப்பாக தேவை!

Ration Card: தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை சேர்க்க சில ஆவணங்கள் தேவைப்படுகிறது.  

 

1 /5

தமிழகத்தில் அரசின் சலுகைகளை பெற ரேஷன் கார்டு முக்கியமானது. அரசு முதல் நிவாரண தொகை முதல் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது.  

2 /5

ரேஷன் கார்டில் வீட்டில் உள்ள அனைவரின் பெயரும் இருப்பது முக்கியம்.  ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பிறந்த குழந்தைகளின் பெயரையும் சேர்க்க வேண்டும்.    

3 /5

ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரை சேர்க்க எந்த ஒரு அரசு அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.   

4 /5

உணவுத் துறை இணையதளத்திற்கு சென்று “Add member to ration card” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.    

5 /5

குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல், குழந்தையின் ஆதார் ஆகியவற்றை கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.  Check Beneficiary Status மூலம் பெயர் சேர்க்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பதை சரி பார்க்க முடியும்.