குரு பெயர்ச்சி பலன் 2024: அடுத்த ஆண்டு இந்த ராசிகளுக்கு பொற்காலம், குபேர யோகம்

Guru Rashi Parivartan 2024: குரு தனது ராசியை அடுத்த ஆண்டு அதாவது 2024-ல் மாற்றப் போகிறார். குருவின் ராசி மாற்றம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றும். குரு மாற்றத்தின் விளைவை அறிந்து கொள்ளுங்கள்.

குரு பெயர்ச்சி 2024: குரு தற்போது மேஷத்தில் வக்ர நிலையில் உள்ளது மற்றும் மே 2024 இல் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைவார். குருவின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி காலத்தில் இருந்து வரும் 13 மாதங்கள் பொற்காலம் போல இருக்கும். இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

 

1 /7

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் குரு நுழைவது சாதகமாக அமையும். இந்த காலகட்டத்தில், நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம். பொருளாதார நிலை மேம்படும். திடீர் பண ஆதாயமும் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாப அறிகுறிகள் தென்படும். தொழில் வாழ்க்கையும் சாதகமாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு உண்டு. அரசு வேலைக்குத் தயாராகும் நபர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பதவியும் மரியாதையும் அதிகரிக்கும்.

2 /7

ரிஷப ராசி: குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் வியாழன் கிரகம் உங்கள் ராசியிலிருந்து லக்னத்திற்கு மாறுகிறது. எனவே, குரு மாறியவுடன், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் ஆளுமையும் மேம்படும். பல வருடங்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். சனிபகவான் உங்களின் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். அதே சமயம் தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.  

3 /7

கடக ராசி: 2024 இல் குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் நிலுவையில் உள்ள வேலைகள் மற்றும் திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். நிதி, வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் தொழில்முறை வெற்றியைப் பெறலாம் மற்றும் உங்கள் நிதி நிலைமையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். தொழில், வியாபாரம் இரண்டும் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.  

4 /7

சிம்ம ராசி: 2024ல் ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மங்களகரமாக அமையப் போகிறது. உங்கள் வருமானம் அதிகரிக்கும், புதிய வருமான வழிகள் தோன்றும். வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.  

5 /7

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் இனிமையான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலை வேகம் பெறும் மற்றும் உங்கள் திட்டமிடல் வெற்றி பெறும். இந்த காலகட்டத்தில் உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சொத்து, வாகனங்கள் வாங்குவதும் சாதகமாகும். உங்களுக்கு அதிர்ஷ்டம் வரலாம்.  

6 /7

மகர ராசி: 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருக்கும். குரு கிரகம் உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த நேரத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். காதல் உறவுகளிலும் நீங்கள் வெற்றி பெறலாம். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் சில தேர்வில் தேர்ச்சி பெறலாம். அதேசமயம் சனிபகவான் உங்கள் ராசியிலிருந்து செல்வ ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராத பணம் கிடைக்கும்.

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.