சிஎஸ்கேவில் 2 மாற்றங்கள்... ராஜஸ்தானில் ஒரே ஒரு மாற்றம் - CSK vs RR பிளேயிங் லெவன் கணிப்பு!

CSK vs RR: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவன் கணிப்பை (CSK vs RR Playing XI Prediction) இங்கு காணலாம்.

  • May 11, 2024, 23:25 PM IST

Chennai Super Kings: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டி சிஎஸ்கே அணிக்கு வாழ்வா சாவா போட்டியாகும். 


 

 

1 /7

17வது ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி நாளை (மே 12) மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.   

2 /7

ராஜஸ்தான் அணி 2வது இடத்திலும், சென்னை அணி 4வது இடத்திலும் புள்ளிப்பட்டியலில் இருக்கின்றன. இருப்பினும் இந்த போட்டி சென்னை அணிக்கு முக்கியமாகும். அந்த வகையில் இந்த போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவன் மற்றும் இம்பாக்ட் பிளேயர் யாராக இருப்பார்கள் என்ற கணிப்பை இங்கு காணலாம்.   

3 /7

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (கணிப்பு): ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் (முதலில் பந்துவீசினால்...)  

4 /7

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் (கணிப்பு): யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மயர், ரோவ்மேன் பாவெல், ஷுபம் துபே, ரவிச்சந்திரன் அஷ்வின், டிரண்ட் போல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா (முதலில் பந்துவீசினால்...)

5 /7

இம்பாக்ட் வீரர்கள்: சென்னை அணியை பொறுத்தவரை ரஹானே தான் பெரும்பாலும் இம்பாக்ட் வீரராக இருப்பார். அதேபோல் ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை ஜாஸ் பட்லர் இம்பாக்ட் வீரராக இருப்பார். இது இரு அணிகளும் முதலில் பேட்டிங் செய்தால் இவர் முதன்மையான பிளேயிங் லெவனில் இருப்பார்கள். இரண்டாம் இன்னிங்ஸில் வேறு வீரர்கள் வரலாம்.   

6 /7

சென்னை அணியை பொறுத்தவரை சேப்பாக்கம் மைதானம் என்பதால் சான்ட்னருக்கு பதில் திக்ஷனாவை கொண்டு வரலாம். அதேசமயம், ரஹானேவுக்கு பதில் மிடில் ஆர்டரை இன்னும் வலுப்படுத்த சமீர் ரிஸ்விக்கும் வாய்ப்பளிக்கலாம்.   

7 /7

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை ரோவ்மேன் பாவெலுக்கு பதில் கூடுதல் ஸ்பின்னருக்காக கேசவ் மகாராஜை ஆட வைக்கலாம். அவர் பேட்டிங்கிலும் கைக்கொடுப்பார். 50 ஓவர்கள் உலகக் கோப்பையில்  பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேசவ் மகராஜ் கடைசி கட்டத்தில் ரன்களை அடித்து தென்னாப்பிரிக்காவை சேப்பாக்கத்தில் வெற்றி பெறவைத்தார். எனவே, கேசவ் மகராஜ் நாளைய போட்டியில் விளையாடலாம்.