IPL 2024: பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை பறிகொடுத்த பரிதாபமான அணி எது தெரியுமா?

IPL 2024 Powerplay Stats: நடப்பு 17ஆவது ஐபிஎல் தொடரில் தற்போதுவரை அதிக விக்கெட்டுகளை பறிகொடுத்த அணி குறித்து இதில் காணலாம். 

  • May 14, 2024, 22:24 PM IST

முதல் ஆறு ஓவர்கள் பவர்பிளே ஆவர்கள் ஆகும். இந்த ஓவர்களில் 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே 2 பீல்டர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

1 /8

ஐபிஎல் என்றில்லை டி20 போட்டிகளில் பேட்டிங் செய்யும் அணிகளுக்கு ரன்களை குவிக்க முக்கியமான ஓவர்கள் என்றால் அது பவர்பிளே ஓவர்தான். எனவே, அந்த ஓவர்களில் விக்கெட்டுகளை அதிகம் பறிகொடுத்தால் ஓப்பனிங் பேட்டிங் சரியாக அமையவில்லை என அர்த்தம்.அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடரின் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை பறிகொடுத்த டாப் 6 அணிகளை இதில் காணலாம். 

2 /8

7. எஸ்ஆர்ஹெச், சிஎஸ்கே: இரு அணிகளும் பவர்பிளேவில் 17 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளன. சிஎஸ்கேவில் இந்த முறை ஓப்பனிங் பெரிய பிரச்னையாக இருந்துள்ளது. எஸ்ஆர்ஹெச் அணிக்கு பலமே இந்த ஆண்டு அதன் அதிரடி ஓப்பனர்களான டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மாதான். எனினும் பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகளை இழந்துள்ளனர். தற்போது புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே 3வது இடத்திலும், எஸ்ஆர்ஹெச் 4வது இடத்திலும் உள்ளன.     

3 /8

6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பவர்பிளேவில் கேகேஆர் 16 விக்கெட்டுகளை இழந்துள்ளது, இதுவும் ஆச்சர்யம்தான். பில் சால்ட் - சுனில் நரைனின் அதிரடிதான் முதல் அணியாக குவாலிபயர் 1 போட்டிக்கு கேகேஆர் தகுதிபெற வைத்துள்ளது எனலாம். எனினும், அதிரடி பேட்டிங்கின் போது பவர்பிளேவிலும் விக்கெட்டை பறிகொடுத்திருக்கின்றனர் என்பது இதில் தெரிகிறது.   

4 /8

5. பஞ்சாப் கிங்ஸ்: இந்த அணி பவர்பிளேவில் 20 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்த அணிக்கும் தொடக்கம் மோசமாகவே இருந்துள்ளது. பிரப்சிம்ரன் சிங், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட தவறினர் எனலாம். 

5 /8

4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆர்சிபி அணியும மொத்தம் 20 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. விராட் கோலி ஆரஞ்சு கேப்பை வைத்திருந்தாலும் கூட பாப் டூ பிளெசிஸ் இந்த முறை பெரிதாக ரன்களை குவிக்கவில்லை.   

6 /8

3. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:எல்எஸ்ஜி மொத்தம் 24 விக்கெட்டுகளை பவர்பிளேவில் இழந்துள்ளது. இந்த அணிக்கும் தொடக்கம் பிரச்னையாகவே இருந்தது. கேஎல் ராகுல் - டி காக் ஆகியோர் இதுவரை பெரிய தொடக்கத்தை அளிக்கவில்லை. இருப்பினும் 3வது வீரரும் அந்த அணிக்கு பிரச்னையாக உள்ளது. இன்றும் கூட டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை பவர்பிளேவில் இழந்ததை பார்க்க முடிந்தது.   

7 /8

2. மும்பை இந்தியன்ஸ்: இந்தாண்டு மும்பை அணி பவர்பிளேவில் 25 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. ரோஹித் சர்மா - இஷான் கிஷான் ஆகியோருக்கு இந்த தொடர் சுமாரான தொடராகவே அமைந்திருக்கிறது.   

8 /8

1. டெல்லி கேப்பிடல்ஸ்: இந்த சீசனின் தொடக்கத்தில் சொதப்பினாலும் பின்னர் வெற்றி மேல் வெற்றி பெற்று, தற்போது பிளே ஆப் வாய்ப்பை நெருங்கிவிட்டது. இருப்பினும் அந்த அணி பவர்பிளேவில் மட்டும் 28 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த அனைத்து தகவல்களும் இன்றைய டெல்லி - லக்னோ போட்டி வரையிலானது.