சித்தார்த்தின் 40வது படத்தை இயக்கப்போவது யார்? வெளியான மாஸ் அப்டேட்!

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும்,’8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், நடிகர் சித்தார்த் அவரது 40வது படத்தில் நடிக்க உள்ளார்.

 

1 /5

பான்-இந்திய நடிகராக சித்தார்த் திரைப்படத் துறையில் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான படங்களில் அவர் நடிக்காவிட்டாலும், அவர் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனைப் படங்களுமே ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவை.   

2 /5

பாலிவுட்டில் 'ரங் தே பசந்தி' மூலம் அழியாத முத்திரையை பதித்தாலும், தெலுங்கில் 'பொம்மரில்லு' மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தாலும் அல்லது தமிழ்த் துறையில் பல்வேறு வகைகளில் ஜொலித்தாலும், சித்தார்த் சினிமா மற்றும் நடிப்பு மீதான தனது அசைக்க முடியாத ஆர்வத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.   

3 /5

அவரது சமீபத்திய படமான 'சித்தா' ரசிகர்களின் இதயங்களை வென்றது. இப்போது, நடிகர் சித்தார்த் அவரின் 40வது படமான ‘சித்தார்த்40’ படத்தில் நடிக்க உள்ளார். ’மாவீரன்’ படத்தைக் தயாரித்த சாந்தி டாக்கீஸ்- அருண் விஸ்வா தயாரிப்பில், ‘8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீகணேஷ் படத்தை இயக்குகிறார்.   

4 /5

இந்த படம் குறித்து பேசிய நடிகர் சித்தார்த் கூறும்போது, " ’சித்தா’ படத்திற்குப் பிறகு பல கதைகளைக் கேட்டேன். ஆனால், ஸ்ரீகணேஷ் சொன்ன கதை உடனே பிடித்து விட்டது. சுவாரஸ்யமான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்ற அருண் விஸ்வாவின் தொலைநோக்கு பார்வை என்னை வியப்பில் ஆழ்த்தியது. எங்கள் அர்ப்பணிப்பும் ஆர்வமும் பார்வையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும் ஒரு அழகான திரைப்படமாக இருக்கும் நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.   

5 /5

'சித்தார்த் 40' படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.