நரேந்திர மோடி பயோபிக் உருவாகிறது!? ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்..

PM Narendra Modi Biopic : பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் ஒரு தமிழ் நடிகர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : May 18, 2024, 01:11 PM IST
  • நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு
  • பிரபல தமிழ் நடிகர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்!
  • அவர் யார் தெரியுமா?
நரேந்திர மோடி பயோபிக் உருவாகிறது!? ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்.. title=

PM Narendra Modi Biopic : பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் ஒரு தமிழ் நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் யார் தெரியுமா?

நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு:

கடந்த சில மாதங்களாக, இந்திய சினிமாவில் பயோபிக் கதைகள் பிரபலமாகி வருகின்றன. உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்படும் படங்களும் பெருகி வருகிறது. இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

ஹீரோ யார்?

மோடியாக, தமிழ் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 

Sathyaraj

சத்யராஜ் இதில் ஹீரோவாக நடிக்க இருக்கும் தகவல், ரசிகர்கள் இடையே தற்போது வைரலாகி வருகிறது. 

உண்மையா?

நரேந்திர மோடியின் பயோபிக் குறித்த செய்தியை பெரும்பாலான சினிமா விமர்சகர்கள் மற்றும் சினிமா தொடர்பாளர்கள் அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கின்றனர். இவர்களில் பலர் சத்யராஜின் மகன், சிபி ராஜையும் டேக் செய்திருக்கின்றனர். இதனால், இது உண்மையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

பாலிவுட்டில் பிரம்மாண்டமான அளவில் உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படத்தில் சத்யராஜ் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | கேன்ஸ் திரைப்பட விழாவில் தனி அங்கீகாரம் பெற்ற மலையாள படமான வடக்கன்!

பெரியாரின் கொள்கைகள் உடைய சத்யராஜ்!

தமிழ் திரையுலகில் முற்போக்கு சிந்தனைகளை கொண்ட, சினிமா பிரபலங்களுள் ஒருவர் சத்யராஜ். 2007ஆம் ஆண்டு பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவான திரைப்படத்தில் இவர்தான் பெரியாரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேக்-அப் போட்ட பிறகு அப்படியே அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப பொருந்தி போனார். படத்தில் மட்டுமன்றி, நிஜ வாழ்க்கையிலும் பெரியாரின் கொள்கைகளை உடையவர் இவர். 

எந்த மேடை ஏறினாலும், பயமே இன்றி நாத்திகம் பேசும் இவர் தற்போது மோடியாக நடிக்க இருக்கும் தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் ரசிகர்கள், பணத்தை வாங்கிக்கொண்டு தன் கொள்கைகளை கூட இப்படி ஓரு சிலர் மாற்றிக்கொள்கின்றனரே என மனம் நொந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

பாஜக ஆதரவாளர்கள் கண்டனம்..

நடிகர் சத்யராஜ், ஆரம்பத்திலிருந்தே பாஜக கொள்கைகளுக்கும் மத ரீதியான அரசியலுக்கும் ஆதரவு தெரிவிக்காதவர். இவர் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர் என்பதாலேயே பாஜகவினர் பலருக்கு இவரை பிடிக்காது. இந்த சமயத்தில் இது போன்ற தகவல் வெளியாகியிருப்பதை தொடர்ந்து, அவர்கள் சத்யராஜ் மோடியாக நடிக்க கூடாது என்று கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். சத்யராஜ் சுய மரியாதை உள்ளவர் என்றும், அவருக்கு பிடிக்காத ஒருவராக அவர் எப்போதும் நடிக்க மாட்டார் என்றும் கூறி வருகின்றனர். இவர் உண்மையாகவே இப்படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பது விரைவில் தெரிய வந்துவிடும். 

மேலும் படிக்க | “வாரிசு படம் மாதிரி இருக்கே..” GOAT அப்டேட்டிற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News