சிங்கிள் ஆக இருப்பது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை: நடிகை திரிசா ஓபன் டாக்

என்னை முழுமையாக புரிந்து கொள்பவர் கிடைக்கும் வரை "சிங்கிள்"ஆக இருப்பது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என நடிகை திரிசா தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2020, 04:08 PM IST
  • 1999-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை பெற்ற நடிகை திரிஷா திரைப் பயணத்தை தொடங்கினார்.
  • திரிஷா முதன் முதலாக 2002-ம் ஆண்டு வெளியான "மெளனம் பேசியதே" மூலம் அறிமுகமானார்.
  • "சிங்கிள்"ஆக இருந்து விடுவேன்" என தனது திருமணம் குறித்து ஓபனாக பேசிய நடிகை திரிசா
சிங்கிள் ஆக இருப்பது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை: நடிகை திரிசா ஓபன் டாக் title=

சினிமா செய்திகள்: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 

1999-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை பெற்ற நடிகை திரிஷா (Actress Trisha Krishnan) தனது திரைப் பயணத்தை தொடங்கினார். திரை உலகில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர் நடிகை திரிஷா. மேலும் சினிமாவைத் தாண்டியும் சமூக அக்கறையுடனும் மனித நேயத்துடன் செயல்பட்டு வருபவர் திரிஷா. 

திரிஷா முதன் முதலாக 2002-ம் ஆண்டு வெளியான "மெளனம் பேசியதே"  (Mounam Pesiyadhe) திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். கடந்த 18 ஆண்டுகளாக திரைத்துறையில் ஜொலிக்கும் நடிகை திரிஷா, 5 மொழிகளில் பல படங்களில் நடித்து, பல விருதுகளை வாங்கியுள்ளார்.

ALSO READ |  ரசிகர்களை குழப்பும் நடிகை திரிஷாவின் டிவிட்டர் பதிவு!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித் உட்பட விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இதுவரை நடிகை திரிஷா திருமணம் (Trisha Marriage) செய்துக்கொள்ளவில்லை. திருமணம் மற்றும் வருங்கால கணவர் குறித்து பேசிய அவர், "என் திருமணம் குறித்து ஏற்கனவே நான் கூறியதைத் தான் மீண்டும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந்து கொள்ளும் ஒருவர் கிடைக்கும் போது திருமணம் செய்து கொள்வேன். அது ஒரு காதல் திருமணமாக தான் இருக்கும். என்னை முழுமையாக புரிந்து கொள்பவர் கிடைக்கும் வரை "சிங்கிள்"ஆக இருப்பது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஒருவேளை அப்படி ஒருவரை நான் நேரில் சந்திக்கவில்லை என்றால், "சிங்கிள்"ஆக இருந்து விடுவேன்" என தனது திருமணம் குறித்து ஓபனாக பேசினார்.

ALSO READ |  நான் பிறப்பால் ஒரு தமிழச்சி பெருமை அடைகிறேன் - திரிஷா உருக்கம்

முன்னதாக பிரபல தொழிலதிபரை நடிகை திரிஷா திருமணம் செய்திக்கொள்ள இருந்தார். அது நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நடக்காமல் போனது. அதன்பிறகு பாகுபலி வில்லன் நடிகர் ராணா மற்றும் திரிஷா இருவரும் காதலிக்கிறார்கள் என்றும், விரைவில் திருமணம் செய்ய போகிறார் என்று திரையுலகில் செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News