சம்மரில் வம்பு பண்ணும் நோய்களை வெச்சி செய்யும் கிராம்பு: கண்டிப்பா சாப்பிடுங்க..நன்மைகளின் பட்டியல் இதோ

Benefits of Cloves in Summer: கிராம்பில் லேசான இனிப்பு மற்றும் கார சுவை உள்ளது. இது பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. சிலர் இதை பச்சையாகவும் உட்கொள்கிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 11, 2024, 06:48 PM IST
  • கிராம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • கிராம்பில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
  • இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
சம்மரில் வம்பு பண்ணும் நோய்களை வெச்சி செய்யும் கிராம்பு: கண்டிப்பா சாப்பிடுங்க..நன்மைகளின் பட்டியல் இதோ title=

Benefits of Cloves in Summer: நமது இந்திய உணவில் பல வித மசாலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவிற்கு சுவையையும் நறுமணத்தையும் சேர்ப்பதோடு நமக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கிராம்பு. கிராம்பை உணவில் சேர்ப்பது உணவின் சுவையையும் ஆரோக்கிய நன்மைகளையும் அதிகரிக்கின்றது. 

கிராம்பில் லேசான இனிப்பு மற்றும் கார சுவை உள்ளது. இது பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. சிலர் இதை பச்சையாகவும் உட்கொள்கிறார்கள். கோடைகால உணவில் கிராம்பை சேர்ப்பதால் பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

செரிமானம்: கிராம்பு செரிமானத்தை மேம்படுத்துகிறது. கிராம்பில் உள்ள யூஜெனால் என்ற கலவை செரிமானத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. இது வாயுத்தொல்லை, அஜீரணம் மற்றும் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி: கிராம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கிராம்பில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை சேதப்படுத்தி நோய்களை உண்டாக்கும். கிராம்பை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவியாக இருக்கின்றது. 

வீக்கத்தைக் குறைக்கும்: கிராம்பில் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கீல்வாதம், மூட்டு வலி மற்றும் தசை வலி போன்ற அழற்சி நோய்களுக்கு இது நன்மை பயக்கும்.

முகப்பரு: கிராம்பு முகப்பருவை குறைக்க உதவுகின்றது. கிராம்பில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. அவை முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்க உதவும். இது முகப்பருவை குணப்படுத்தவும், மீண்டும் வராமல் தடுக்கவும் உதவும்.

வாய் துர்நாற்றம்: கிராம்பு வாய் துர்நாற்றத்தை போக்க பெரிய அலவில் உதவுகின்றது. கிராம்புகளில் இருக்கும் கிருமி நாசினிகள், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க உதவுகின்றன. கிராம்பை தொடர்ந்து உட்கொள்வதால் சுவாசம் புத்துணர்ச்சியுடனும் சுத்தமாகவும் இருக்கும். 

மேலும் படிக்க | உடலின் அனைத்து பிரச்சனைகளையும் பீஸ் பீஸாக்கும் பூண்டு: கண்டிப்பா சாப்பிடுங்க

மன அழுத்தம்: கிராம்பை உட்கொள்வதால் மன அழுத்தம் குறைவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கிராம்பில் மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. அவை கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. கிராம்பு உட்கொள்வதாக் நல்ல தூக்கம் கிடைப்பதோடு ஒட்டுமொத்த மன ஆரோக்கியமும் மேம்படுகின்றது. 

நீரிழிவு நோய்: கிராம்பு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் திறன் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

கிராம்பை உட்கொள்ளும் முறை:

கிராம்பை தேநீர் அல்லது காபியில் சேர்த்து குடிக்கலாம். ஒரு கிளாஸ் வெந்நீரில் 2-3 கிராம்புகளை கொதிக்க வைத்து கிராம்பு நீரை குடிக்கலாம். இது தவிர உணவில் கிராம்புகளை மசாலாப் பொருளாகப் பயன்படுத்தலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News