தூங்குவதற்கு முன்பு இந்த 5 விஷயங்களை நீங்கள் செய்தால் மன அழுத்தமே இருக்காது

மன அழுத்தம் பிரச்சனையால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால் தூங்குவதற்கு முன்பு இந்த 5 விஷயங்களை செய்தால் அதில் இருந்து முழுமையாக விடுபடலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 5, 2023, 07:16 PM IST
  • மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா’
  • எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க மந்திரம்
  • இதனை தினமும் பின்பற்றுங்கள்
தூங்குவதற்கு முன்பு இந்த 5 விஷயங்களை நீங்கள் செய்தால் மன அழுத்தமே இருக்காது title=

ஒவ்வொருவரும் இரவு தூங்கும் முன்னர் இந்த 5 விஷயங்களை தவறாமல் செய்து வந்தால் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை கண்கூடாக பார்ப்பீர்கள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருப்பதைபோல் உணர்வீர்கள்.

திட்டமிடுங்கள்

முதலில் இரவு தூங்கும் முன்னர் மறுநாள் முழுவதும் என்ன செய்ய வேண்டும்? என்பதை திட்டமிட வேண்டும். நோட்டு பேனா ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மொபைல் போனில் இருக்கும் நோட் பேடை எடுத்து நாளைக்கு என்னவெல்லாம் எந்த நேரத்தில் எல்லாம் செய்ய வேண்டும்? என்பதை திட்டமிட்டு குறித்துக் கொள்ளுங்கள். இதனால் மனமானது தெளிவுரும்.

மேலும் படிக்க | அசத்தும் ஆயுர்வேதம்: 5 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!!

காலையில் தண்ணீர்

இரவு தூங்கும் முன்பு ஒரு காப்பர் வாட்டர் கேன் அல்லது செம்பு பாத்திரம், ஜக்கு என்று ஏதாவது ஒன்றில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பி வைத்து மூடி விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை நீங்கள் முழுவதுமாக பருகி விடுங்கள். இதனால் உடல் ஆனது காப்பர் சத்துடன் குளிர்ச்சியற்று வறட்சி இல்லாமல் உஷ்ணத்தன்மை குறையும். உடலில் இருக்கக்கூடிய கழிவுகளும் தங்காமல் வெளியேறும். இதனால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். செம்பு பாத்திரங்களை சாதாரண தண்ணீர் மட்டுமே ஊற்றி பயன்படுத்த வேண்டும். சுடு தண்ணீரை ஊற்றக்கூடாது.

தூங்குவதற்கு முன்பு மசாஜ்

இரவு தூங்கப் போவதற்கு முன்னர் ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஏதாவது ஒன்றை பாதங்களில் தடவி லேசாக மசாஜ் செய்து விடுங்கள். இதனால் நாள் முழுக்க உழைத்துக் கலைத்த வலி கொஞ்ச நேரத்தில் பஞ்சாய் பறக்கும். எந்த எண்ணெயும் இல்லை என்றால் சாதாரண தேங்காய் எண்ணெய் கூட பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். இது நல்லதொரு தூக்கத்தை உங்களுக்கு கொடுக்கும்.

ஆரோக்கிய உணவு

நம் உடலுக்கு அதிக அளவு சத்துக்களை கொடுக்க கூடியது உலர் பழங்கள் மற்றும் உலர் கொட்டைகள் ஆகும். இந்த டிரை ஃப்ரூட்ஸ், டிரை நட்ஸ் போன்றவற்றை இரவில் ஊற வைத்து கொள்ளுங்கள். காலையில் முதல் உணவாக இதை சாப்பிட்டால் அன்றைய நாள் உற்சாகத்திற்கு அளவே இருக்காது. மனதிலும், உடல் அளவிலும் பெரும் மாற்றத்தை நீங்கள் காணலாம்.

தூங்குவதற்கு முன்பு

மிக சில வருடங்களுக்கு முன்பு வரை அவ்வளவாக யாரும் தூங்கும் பொழுது வெளிச்சம் தரக்கூடிய பொருட்களை அதிக அளவு பயன்படுத்தியது கிடையாது ஆனால் இப்பொழுது டிவி, லேப்டாப், போன் என்று எல்லா இடங்களிலும் இரவில் கூட அதன் வெளிச்சத்தை பார்க்க வேண்டி இருக்கிறது. நீண்ட நேரம் இவ்வெளிச்சத்தை பார்ப்பதால் உடல் இயல்பாகவே தூக்க நிலையில் இருந்து மாறுபட்டு தூக்கத்தை கெடுத்து விடுகிறது. வரவேண்டிய தூக்கமும் வராமல் போவதற்கு இதுதான் மிக முக்கிய காரணமாக இருக்கிறது எனவே தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னர் வெளிச்சம் தரக்கூடிய இத்தகைய நவீன உபகரணங்களை ஆப் செய்து விடுங்கள். பிறகு பாருங்கள் சோர்வும் இருக்காது, அதனால் உண்டாக கூடிய டிப்ரஷனும் போயே போய்விடும்.

மேலும் படிக்க | அசத்தும் ஆயுர்வேதம்: 5 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News