8th Pay Commission முக்கிய அப்டேட்: ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

8th Pay Commission: 8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்தோடு சில வழக்கமான முறைகளும் மாற்றப்படக்கூடும் என கூறப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 9, 2023, 06:06 AM IST
  • 8th Pay Commission: அடுத்த வருடம் ஊழியர்களுக்கு பரிசு கிடைக்குமா?
  • எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?
  • யாருக்கு லாபம் அதிகம்?
8th Pay Commission முக்கிய அப்டேட்: ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? title=

8வது ஊதியக்கமிஷன், சமீபத்திய செய்திகள்: 2024 மக்களவை தேர்தலுக்கு முன், 8வது சம்பள கமிஷனை அரசு அமல்படுத்தும் என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும், அரசுக்கு இதுவரை அப்படிப்பட்ட திட்டம் எதுவும் இல்லை என நிதித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், 8வது ஊதியக் குழுவை உருவாக்கி அமல்படுத்த நிதி அமைச்சகத்திற்கு அரசியல் அழுத்தம் அதிகரித்து வருவதாக நம்பப்படுகிறது.

சமீபத்தில், தற்போது எட்டாவது ஊதியக் குழுவின் திட்டம் பற்றி அரசு யோசிக்கவில்லை என நிதித்துறை செயலர் தெரிவித்திருந்தார். நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் கூறுகையில், '8வது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பாக, தற்போது எந்த திட்டமும் இல்லை' என கூறியதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.

வழக்கமாக, தேர்தலுக்கு முன், இதற்கு முந்தைய அரசாங்கங்கள் ஓய்வூதியம் பெறுவோர், ஆயுதப்படைகள் மற்றும் மத்திய ஊழியர்களை கவர ஊதியக் குழுவைப் பயன்படுத்தி வந்துள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு 7வது ஊதியக் குழுவை அமைத்தது.

பாஜக-வின் கவனம்

எனினும் தற்போதைய பாஜக அரசு மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) மற்றொரு முக்கிய திட்டமான ஓய்வூதியத் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) பாஜக அரசு மறுஆய்வு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா சட்டசபைத் தேர்தல்களில் ஒரு பெரிய பிரச்னை தலைதூக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், NPS மற்றும் OPS, அதாவது பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த பிரச்சனையை ஐந்து மாநிலங்களில் (மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர்) கட்சிகள் பரவலாக எழுப்பின. 

மேலும் படிக்க | பான் கார்டு இல்லாமல் தனிநபர் கடன் வாங்க... விதிகளும் வழிமுறைகளும்..!!

இதை பரிசீலனை செய்ய ஒரு குழுவையும் அரசு அமைத்துள்ளது. நிதி செயலாளர் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். 'சம்பந்தப்பட்ட அனைவரையும் கலந்தாலோசித்து, விரைவில் அறிக்கை தாக்கல் செய்வோம்,' என, அவர் சமீபத்தில் கூறினார். ஓய்வுபெறும் போது ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் சம்பளத்தில் 40 முதல் 45 சதவீதத்தையாவது பெறும் வகையில், அரசும் இதில் சில மாற்றங்களைச் செய்யலாம் என நம்பப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் இன்னும் கூறப்படவில்லை.

8வது ஊதியக்குழு: எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்

8வது ஊதியக்குழு (8th Pay Commission) உருவாக்கப்பட்டால் அதன் உருவாக்கத்தோடு சில வழக்கமான முறைகளும் மாற்றப்படக்கூடும் என கூறப்படுகின்றது. பத்து வருடங்களுக்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக அரசு ஒவ்வொரு வருடமும் ஊழியர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்ய ஆரம்பிக்கலாம் என்று ஊடகக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. சம்பள திருத்தத்திற்காக (Salary Hike) ஊழியர்கள் 10 ஆண்டுகள் அதாவது நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம் என அரசு விரும்புகிறது. அவர்களின் பணித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். 7வது ஊதியக் குழுவிலேயே (7th Pay Commission) இது பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சம்பளத்தை உயர்த்த ஊதியக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து அரசு ஒரு புதிய வழியில் திட்டமிட்டு வருகிறது. 

ஊதிய ஏற்றம்

8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை ஊதியமும் பிற அலவன்சுகளும் அதிகரிக்கும். அனைத்து உதிய கூறுகளும் உயரும் என்பதால், ஊழியர்களின் ஒட்டுமொத்த சம்பளத்தில் நல்ல அதிகரிப்பை காணலாம்.

மேலும் படிக்க | PPF... மாதம் ₹500 போதும்... லட்சங்களில் பணத்தை சேமிக்கலாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News