பால்டிமோர் பாலம் விபத்து... கப்பலில் உள்ள 20 இந்திய பணியாளர்கள் நிலை என்ன..!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பாலத்தின் மீது கப்பல் மோதியதன் காரணமாக 2.6 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது. கப்பலில் 20 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கையர் உட்பட 21 பணியாளர்கள் இருந்தனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 2, 2024, 06:08 PM IST
  • பால்டிமோர் பாலம் விபத்துக்குப் பிறகு படகில் இருக்கும் குழுவினர்.
  • கப்பலில் இருந்த 21 பணியாளர்களில் 20 பேர் இந்தியர்கள்.
  • மார்ச் 26 அன்று பால்டிமோர் பாலத்தில் கப்பல் மோதியது.
பால்டிமோர் பாலம் விபத்து... கப்பலில் உள்ள 20 இந்திய பணியாளர்கள் நிலை என்ன..! title=

Baltimore Bridge Collapse: பால்டிமோர் நகரில் படப்ஸ்கோ ஆறு மீது  கட்டப்பட்டுள்ள இரும்பு பாலம் சுமார் 2.6 கி.மீ நீளம் கொண்டது. இந்த பாலம் அமெரிக்காவின் மிகவும் பிஸியான பாலங்களில் ஒன்று. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. கடந்த மார்ச் 26ம் தேதியன்று சிங்கபூரை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று படப்ஸ்கோ ஆற்றை கடந்து சென்றபோது, இந்த பாலத்தின் மீது மோதியதில் பாலம் இடிந்து விழுந்தது. இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின்போது, பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த சரக்கு லாரி, கார்கள் உள்ளிட்டவை ஆற்றில் விழுந்தன.

கப்பலில் உள்ள  20 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கை பணியாளர்

கடந்த வாரம் அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் மோதிய கப்பலில் 20 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கை பணியாளர், "கப்பலில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்" மற்றும் விபத்து தொடர்பான விசாரணை முடியும் வரை கப்பலில் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. கப்பலின் செய்தித் தொடர்பாளர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “கப்பலில் 21 பணியாளர்கள் உள்ளனர். குழு உறுப்பினர்கள் கப்பலில் தங்கள் வழக்கமான பணிகளைச் செய்கிறார்கள். இவர்கள் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் கடலோர காவல்படையின் விசாரணைக்கு உதவுகிறார்கள்” என கூறியுள்ளார்.

விசாரணை முடியும் வரை குழுவினர் கப்பலில் இருப்பார்கள்

பால்டிமோர் நகரில் உள்ள படாப்ஸ்கோ ஆற்றின் மீது இருந்த 2.6 கிலோமீட்டர் நீளமுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம், மார்ச் 26 அன்று இலங்கை நோக்கிச் சென்ற 984 அடி நீள சரக்குக் கப்பல் பாலத்தின் தூணில் மோதியதில் இடிந்து விழுந்தது. குழுவினர் எவ்வளவு நேரம் கப்பலில் இருப்பார்கள் என்று கேட்டதற்கு, செய்தித் தொடர்பாளர், "விசாரணை நடவடிக்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தற்போது கூறி இயலாது. விசாரணை முடியும் வரை குழுவினர் கப்பலில் இருப்பார்கள்" என்று கூறினார். சிங்கப்பூர் கொடியிடப்பட்ட கப்பல் கிரேஸ் ஓஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் சினெர்ஜி மரைன் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்தியர்களின் வயிற்றில் பால் வார்க்கும் கனடா பிரதமர்! இனி வாடகை பிரச்சனை இருக்காது!

கப்பல் குழுவினருடன் தொடர்பில் உள்ள இந்திய தூதரகம் 

டெல்லியில், சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் மோதிய சரக்கு கப்பலில் 20 இந்தியர்கள் இருந்ததாகவும், இந்திய தூதரகம் அவர்களுடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் டாலி கப்பலில் இருந்த ஊழியர்களை விசாரிக்கத் தொடங்கினர். புதன்கிழமை விசாரணையின் ஒரு பகுதியாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்  NTSB, ஆவணங்கள், பயண பதிவு தகவல் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்ததாக சினெர்ஜி குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்பு பணி

கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகள் பாதுகாப்பாக உள்ளதாக கிரேஸ் ஓஷன் மற்றும் சினெர்ஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஒரு பணியாளர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும், காயமடைந்த குழு உறுப்பினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். விபத்தின் போது பாலத்தில் பணியில் இருந்த கட்டுமான பணியாளர்கள் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் நால்வரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | ரத்தத்தை குடிக்கும் பெண்... அதுவும் தினமும் 1 லிட்டர்... இந்த பழக்கம் வந்தது எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News