Infinix Note 50: 8000mAh பேட்டரி, 200MP கேமரா என அமர்களப்படுத்தும் இன்பினிக்ஸ்..!

Infinix Note 50 ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரி, 200MP கேமரா தரத்துடன் வெளிவரவுள்ளது. அதன் மொபைலின் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 19, 2024, 06:47 PM IST
  • இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புது மொபைல்
  • 200 எம்பி கேமரா, 8000 mAH பேட்டரி இருக்கிறது
  • புகைப்பட பிரியர்களுக்கு உகந்த மொபைல்
Infinix Note 50: 8000mAh பேட்டரி, 200MP கேமரா என அமர்களப்படுத்தும் இன்பினிக்ஸ்..! title=

மொபைல் போன் புதிதாக வாங்க விரும்புபவர்களுக்கு சூப்பரான மொபைல் பற்றிய அப்டேட் வந்துள்ளது. இன்பினிக்ஸ் நிறுவனம் நல்ல தரமான கேமரா மற்றும் பேட்டரி குவாலிட்டி கொண்ட மொபைலை அறிமுகப்படுத்த இருக்கிறது. அந்த மொபைலில் 200MP கேமரா இருப்பது தான் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அதுமட்டும்மல்லாமல் இன்னும் பல சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் இருக்கிறது. அவை என்ன என்பதை பார்க்கலாம். 

Infinix Note 50 கேமரா குவாலிட்டி

Infinix Note 50 ஸ்மார்ட்போனில் 64MP செல்ஃபி கேமரா மற்றும் 200MP பிரதான கேமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2MP மைக்ரோ கேமரா ஆகியவை பின்புற பேனலில் இடம்பெற்றுள்ளது. கேமரா குவாலிட்டி கொண்ட மொபைலை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த மொபைல் வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம். அத்துடன் Infinix Note 50 ஃபோன் 130Hz புதுப்பிப்பு வீதத்துடன் வர இருக்கிறது. 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே முழு எச்டியில் கிடைக்கும்.

மேலும் படிக்க | OpenAI Sora வீடியோக்களை எப்படி உருவாக்குகிறது? நீங்கள் பயன்படுத்துவது எப்படி?

Infinix Note 50 பேட்டரி

ஏற்கனவே கூறியதுபோல் Infinix Note 50 ஸ்மார்ட்போனில் 8000mAh பெரிய பேட்டரி இருக்கலாம். சிறந்த பேட்டரி ஆதரவுடன், உங்கள் ஃபோனை சில நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

Infinix Note 50 செயலி மற்றும் சேமிப்பு

Infinix Note 50 ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 888 octa core செயலி மூலம் இயக்க முடியும். இது உங்கள் போனை சீராக இயங்க வைக்கும். Infinix Note 50 ஃபோன் 8GB மற்றும் 12GB RAM மற்றும் 256GB மற்றும் 512GB ROM உடன் கிடைக்கும்.

மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு மொபைல் வச்சிருக்கீங்களா? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News