நீதி துறையால் என்னை தொட முடியாது; சவால் விடும் நித்தியாந்தா...

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டையே உருவாக்கி உள்ள நித்யானந்தா தற்போது தன்னை பரமசிவன் என்றும், தன்னை நீதிதுறையால் தொட கூட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 7, 2019, 05:17 PM IST
நீதி துறையால் என்னை தொட முடியாது; சவால் விடும் நித்தியாந்தா... title=

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டையே உருவாக்கி உள்ள நித்யானந்தா தற்போது தன்னை பரமசிவன் என்றும், தன்னை நீதிதுறையால் தொட கூட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தா. தற்போது  பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார். நித்யானந்தரின் இந்த மடத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு கிளைகள் உள்ளது. 

இந்நிலையில், தற்போது  நித்யானந்தா தனக்கென ஒரு புதிய நாட்டையே உருவாக்கி நிர்வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையல் தற்போது புதிதாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் தான் தான் பரமசிவன் என்றும், தன்னை யாராலும் தொடகூட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., யாரும் என்னைத் தொட முடியாது. என்னை ஆஜர்படுத்துவதற்கு எந்த நீதிமன்றமும் கிடையாது. நான் மரணத்தை வென்றவிட்டேன்., என்னை மரணமும் நெருங்காது’ என தெரிவித்துள்ளார்.

குழந்தை கடத்தல் வழக்கில் குஜராத் போலீசார் நித்தியானந்தா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது நித்தியானந்தா நீதி துறையை குறிவைத்து வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

இணைய தளத்தில் நித்தியானந்தா பேசும் சமீபத்திய வீடியோக்கள் கடந்த மாதம் 22-ஆம் தேதியில் இருந்து வைரலாகி வருகின்றன. ஆனால் அவர் எந்த இடத்தில் இருந்து பேசுகின்றார், வீடியோக்கள் எங்கிருந்து வெளியாகிறது என்ற தகவல்கள் கண்டறியப்படா புதிராகவே உள்ளது. 

இதனிடையே போலி சாமியாரான நித்யானந்தா ஈக்வேடார் நாட்டிக்கு சொந்தமான தீவு ஒன்றை விலைக்கு வாங்கி,  சொந்த நாட்டை அமைத்துள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியாகின. ஆனால் அது உண்மை இல்லை என்று அந்நாட்டின் நாட்டின் தூதரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் தனது நாட்டில் எந்தவொரு நிலத்தையும் அல்லது எந்த தீவையும் வாங்குவதற்கு அரசாங்கம் நித்யானந்தா உதவ வில்லை என்றும், நித்தியானந்தா ஈக்வேடாரில் தஞ்சம் அடையவில்லை என்று ஈக்வேடார் அரசு பகிரங்கமாக மறுத்துள்ளது.

Trending News