Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... சிலருக்கு சூப்பர்... சிலருக்கு சுமார்!

Weekly Horoscope (Feb-26 -March 3): பிப்ரவரி 26 ஆம் தேதியுடன் தொடங்கும் வாரத்தில், எந்தெந்த ராசிகள் பலனடைய போகிறார்கள், எந்தெந்த ராசிகளுக்கு சுமாரான வாரமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 25, 2024, 01:19 PM IST
  • திட்டமிட்டபடி காரியங்கள் அனைத்தும் நிறைவேறுவதால், மனதிற்கு நிம்மதி கொடுக்கும் வாரமாக இது இருக்கும்.
  • பயணத்தினால் நல்ல ஆதாயம் கிடைக்கும். செல்வாக்கு மிக்க நபர்களுடன் தொடர்பு ஏற்படும்.
  • பிப்ரவரி 26 ஆம் தேதியுடன் தொடங்கும் வாரத்திற்கான ராசிபலன்கள்.
Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை...  சிலருக்கு சூப்பர்... சிலருக்கு சுமார்! title=

Weekly Horoscope (Feb-26 -March 3): பிப்ரவரி 26 ஆம் தேதியுடன் தொடங்கும் வாரத்தில், எந்தெந்த ராசிகள் பலனடைய போகிறார்கள், எந்தெந்த ராசிகளுக்கு சுமாரான வாரமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்கான இந்த வார பலன்கள்

மேஷ ராசிகளுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த பணிகள், அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவினால் நிறைவேறும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நீண்ட கால ஆசைகள் சில பூர்த்தியாவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நிலம் வீடு கட்டிடங்கள் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷப ராசிக்கான இந்த வார பலன்கள்

ரிஷப ராசியினர் சோம்பலை விட்டு சிறிது கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பண வரவு செலவுகளை விட அதிகமாகவே இருக்கும். அதனால் சிறிது கவனமாக இருக்கவும். தடைபட்டுள்ள வேலையை முடிக்க அதிகம் அலைய வேண்டியிருக்கும். சில தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.

மிதுன ராசிக்கான இந்த வார பலன்கள்

வாரத்தின் தொடக்கத்தில் வரும் நல்ல செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆன்மீக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் செலவும் அதிகம் இருக்கும். தொலைதூரப் பயணம் மூலம், வேலையில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கடக ராசிக்கான இந்த வார பலன்கள்

கடக ராசியினருக்கு இந்த வாரம் கலக்கல் ஆகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வு பதவி உயர்வு பெற்று சந்தோஷமாக இருப்பார்கள். எனினும் செலவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டை பழுதுபார்க்க அல்லது வீட்டில் உள்ள சாமான்களை பழுது பார்க்க செலவு செய்ய நேரிடலாம். குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்கி செலவழிப்பதன் மூலம், குடும்பத்தில் இணக்கம் ஏற்படும். தடைகள் சில இருந்தாலும், பொதுவாக இந்த வாரம் ஒரு நல்ல வாரமாகவே இருக்கும்

சிம்ம ராசிக்கான இந்த வார பலன்கள்

சிம்ம ராசிகளுக்கு இந்த வாரத்தில் அதிர்ஷ்டத்திற்கு குறைவே இருக்காது. பயணத்தினால் நல்ல ஆதாயம் கிடைக்கும். செல்வாக்கு மிக்க நபர்களுடன் தொடர்பு ஏற்படும். இது உங்கள் வருங்கால வளர்ச்சிக்கு உதவும். எதிர்பார்த்தபடி பல வேலைகள் முடிவடைவதை கண்டு, உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பண வரவும் அதிகரிக்கும்.  திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி ராசிக்கான இந்த வார பலன்கள்

கன்னி ராசியினரை பொறுத்தவரை, இந்த வாரம் சுமாரான வாரம் ஆகவே இருக்கும். உடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நிலம் கட்டிடம் வாங்குவது தொடர்பான முடிவை எடுக்கும் முன், குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஆலோசனை செய்யவும். வார இறுதியில் நிதி சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். வரவுக்கு அதிகமாக செலவு இருப்பதால், சிறிது கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024: பதவி உயர்வு, பணபலம் சேரக்கூடிய அதிர்ஷ்டசாலி ராசிகள் இவைதான் 

துலாம் ராசிக்கான இந்த வார பலன்கள்

துலாம் ராசிகளுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாகவே இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் விருப்பங்கள் நிறைவேறுவது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். நிலம் சொத்து வாங்கும் விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் முழுமையான ஆதரவும் உதவியும் கிடைக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறிது பாதிப்பு ஏற்படலாம். எனவே சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.

விருச்சிக ராசிக்கான இந்த வார பலன்கள்

விருச்சிக ராசியினரை பொறுத்தவரை கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது.. முக்கிய முதலீடுகள் ஏதேனும் செய்வதாக இருந்தால் அதனை கவனமாக செய்யவும். வீட்டில் நடக்கும் விஷயங்கள் மனதிற்கு கவலையை கொடுக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் உடலுறவு குறைவு காரணமாக பணம் செலவழிக்க நேரிடலாம். நிதி தொடர்பான விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது.

தனுசு ராசிக்கான இந்த வார பலன்கள்

தனுசு ராசியினரை பொறுத்தவரை இந்த வாரம் அட்டகாசமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். இதனால் ஏற்படும் புதிய தொடர்புகள் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். வேலையில் சில தடைகள் ஏற்படலாம். ஆனாலும் உங்கள் திறமையால் அதனை சமாளித்து விடுவீர்கள். வருமானத்திற்கான கூடுதல் ஆதாரம் உங்கள் நிதி நிலையை உயர்த்தும்.

மகர ராசிக்கான இந்த வார பலன்கள்

மகர ராசியினருக்கு திட்டமிட்டபடி காரியங்கள் அனைத்தும் நிறைவேறுவதால், மனதிற்கு நிம்மதி கொடுக்கும் வாரமாக இது இருக்கும். உற்றார் உறவினர்களால் சந்தோஷம் ஏற்படும். வீட்டில் சுப காரியம் நடக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் பணிகள் பாராட்டப்படும்.

கும்ப ராசிக்கான இந்த வார பலன்கள்

கும்ப ராசியினருக்கு இந்த வாரம் பொறுப்புகள் அதிகரிக்கலாம். அதனால் வேலைப்பளுவும் அதிகரிக்கலாம். சவால்கள் அதிகம் இருக்கும் என்றாலும், உங்கள் திறமையால் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தினரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எனினும் ஆவணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும், இல்லை என்றால் பண இழப்பை சந்திக்க நேரிடலாம்.

மீன ராசிக்கான இந்த வார பலன்கள்

மீன ராசியினருக்கு இந்த வாரம் அட்டகாசமான வாரமாக இருக்கும். சவால்கள் அதிகம் இருந்தாலும், குடும்பத்தினர் ஆதரவாளும் உதவியாலும், அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள்.. உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி வரும். உங்கள் சமூகப் பணிகளுக்கான பாராட்டுகள் கிடைக்கும். மதிப்பு கௌரவம் கூடும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். புனித யாத்திரை போக திட்டமிடலாம்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Astro Traits: அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதனின் ஆசி பெற்ற ‘4’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News