கொல்கத்தா அணியுடன் தோல்வி! ஐபிஎல் பிளேஆஃப்களுக்கு தகுதிபெற முடியுமா லக்னோ?

ஐபிஎல் 2024 போட்டிகளில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கு 4 அணிகள் போட்டி போடுகின்றன.

 

1 /5

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இந்த தோல்வி அவர்களின் பிளேஆஃப் கனவை சிக்கலாக்கி உள்ளது.  

2 /5

இன்னும் லீக் கட்டத்தில் அவர்களுக்கு மூன்று ஆட்டங்கள் மீதமுள்ளது. லக்னோ தற்போது புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இதுவரை, 11 ஆட்டங்களில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.   

3 /5

தற்போது 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள லக்னோ 16 புள்ளிகளைப் பெற அடுத்த மூன்று ஆட்டங்களில் குறைந்தது இரண்டில் வெற்றி பெற வேண்டும். மேலும் அவர்களின் நிகர ரன்-ரேட்டையும் நன்கு வைத்திருக்க வேண்டும்.  

4 /5

மறுபுறம் சென்னை அணி தற்போது புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது.  

5 /5

இன்னும் சென்னை அணிக்கு 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில் 2 போட்டிகளில் கட்டாய வெற்றி தேவைப்படுகிறது.  இதனால் அடுத்தடுத்து வரும் போட்டிகள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளன.