சரிகமப சீசன்3: இறுதிப்போட்டிக்கு வரப்போகும் சிறப்பு விருந்தினர்கள் லிஸ்ட் - இவருமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகம்ப சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 18, 2023, 12:02 PM IST
  • சரிகமப சீசன் 3 இறுதிப்போட்டி
  • சிறப்பு விருந்தினர்கள் லிஸ்ட் இதோ
  • ஸ்ரேயா கோஷல், சந்தானம், ஜெயம் ரவி பங்கேற்பு
சரிகமப சீசன்3: இறுதிப்போட்டிக்கு வரப்போகும் சிறப்பு விருந்தினர்கள் லிஸ்ட் - இவருமா? title=

தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கின்றன. சூப்பர் சிங்கருக்கு இருப்பது போலவே சரிகமப நிகழ்ச்சிக்கு பிரத்யேக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இதனால் தான் இந்த நிகழ்ச்சி வெற்றிபெற்று இப்போது மூன்றாவது சீசனின் இறுதியில் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த சரிகமப சீசன் 3 நிகழ்ச்சி பல்வேறு கட்டங்களைக் கடந்து இப்போது இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. 

மேலும் படிக்க | OTTல் வெளியாகியுள்ள புதிய திரைப்படங்கள்; Netflix, Amazon, Hotstar, ZEE5ல் பாருங்கள்!

நிகழ்ச்சி தொடங்கும்போது மொத்தம் 23 போட்டியாளர்கள் இருந்தனர். சரிகமப நிகழ்ச்சியை சுவாரஸ்யம் குறையாமல் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்க, முன்னணி மற்றும் பிரபல பாடகர்களான ஸ்ரீ நிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியாளர்களை வழி நடத்தி மதிப்பிட்டு வந்தனர்.  ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக பாடும் பாடகர்களுக்கு பிரத்யேக பரிசுகளும், குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மீண்டும் உற்சாகத்தையும் மூட்டி நன்றாக பாட ஒத்துழைப்பு கொடுத்தனர். 

மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் இத்தனை ‘வாரிசு’ நடிகர்களா..! முடிவே இல்லாமல் நீளும் லிஸ்ட்..!

கானா, கிராமத்து பாடல், மேற்கத்திய பாடல் சுற்று என பல்வேறு சுற்றுகளின் அடிப்படையில் இறுதிப்போட்டி 6 போட்டியாகள் சென்றுள்ளனர். அக்ஷயா, ஜீவன், புருஷோத்தமன், லக்ஷனா, ராகவர் ஷினிமற்றும் நாகார்ஜுன் ஆகியோர் இறுதிப் போட்டியில் மகுடத்துக்காக தங்களின் கடைசி வாய்ப்பில் முழு திறமையையும் வெளிப்படுத்த இருக்கின்றனர். 

சரிகமப நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நேரடி ஒளிபரப்பாக ஞாயிற்றுகிழமையான இன்று மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னணி திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். அவர்களின் லிஸ்ட் இப்போது வெளியாகியிருக்கிறது. சரிகமப சீசன் 3 கிராண்ட் பைனல் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சென்சேஷனல் பாடகி ஸ்ரேயாகோஷல், நடிகர் சந்தானம், ஜெயம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சரிகமப நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் கோலாகலமாக களைகட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News