‘மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ’ பிரபல நடிகர் சொல்லும் அதிர்ச்சி தகவல்..!

‘மாமன்னன்’  பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ என பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் கூறியிருக்கிறார். 

Written by - Yuvashree | Last Updated : Aug 6, 2023, 01:02 PM IST
  • தன் பட நடிகர்களை மாரி செல்வராஜ் அடிப்பார் என கூறப்படுகிறது.
  • மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ என பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் பேசியுள்ளார்.
  • இவர், சாதிய ரீதியிலான கருத்துகளையும் திணிப்பதாக அந்த நடிகர் பேசியுள்ளார்.
‘மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ’ பிரபல நடிகர் சொல்லும் அதிர்ச்சி தகவல்..! title=

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘மாமன்னன்’ திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்னர் மாரி செல்வராஜ் ‘தேவர் மகன்’ படத்தை பற்றி கூறிய கருத்து பெரிய போரையே கிளப்பி விட்டது. மேலும், சிலர் அவர் குறித்த விஷயங்களையும் சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். அதில் பரவலாக பேசப்பட்ட ஒன்று, அவர் தன் படத்தில் நடிப்பவர்களை அடிப்பார் என்பதுதான். 

மாரி செல்வராஜ் நடிகர்களை அடிப்பாரா..? 

இயக்குநர் மாரி செல்வராஜ், ‘பரியேறும் பெருமாள்’ படம் மூலமாக திரையுலகிற்குள் நுழைந்தார். இந்த படத்தில் நடிகர் கதிர், ‘கயல்’ ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் நாயகனின் அப்பா கதாப்பாத்திரத்தில் ஒரு கிராப்புற நடனக்கலைஞர் நடித்திருந்தார். அவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், மாரி செல்ராஜ் தன்னை ஒரு காட்சியல் ரியலிஸ்டிக்காக காண்பிக்க வேண்டும் என்பதற்காக அடித்தார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவும் மாமன்னன் பட சர்ச்சையின் போது ட்ரெண்ட் ஆனது. மாமன்னன் பட ப்ரமோஷன்களில் அப்படத்தின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் ‘சைக்கோ சார் அந்த ஆளு..’ என்று பேசியிருப்பார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. 

மேலும் படிக்க | ஜோஜு ஜார்ஜுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Mari selvaraj

நகைச்சுவை நடிகர்:

தமிழ் படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர், டெலிபோன் ராஜ். வடிவேலு, மாதவன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து காெண்டார். அப்பாேது அவர் மாரி செல்வராஜ் தன் படத்தில் நடிகர்களை அடிப்பது குறித்து பேசினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் பட ப்ரமோஷன்களில் மாரி செல்வராஜ் குறித்து பேசிய விஷயங்களை மேற்கோள் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “சாதியை அடிப்படையாக வைத்து வன்மத்தை கக்குவது அருவருப்பான செயல். இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு சாதி என்றால் என்ன என்றே தெரியவிலை. ஆனால் மாமன்னன் படத்தை பார்த்த பிறகு அவர்கள் ஏன் எல்லோரும் மறந்த விஷயத்தை படமாக எடுக்குறீர்கள் என கேள்வி கேட்கின்றனர். பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்றவர்கள் சாதியை ப்ரமோட் செய்வதற்காகவே படம் எடுக்கிறார்கள். இவர்களது படத்தை பார்ப்பவர்கள், அதை சாதிய அடிப்படையிலேயே கொண்டாடுகிறார்களே ஒழிய ரசிகர்களாக பார்ப்பதில்லை..” என்றார். 

“நடிகர்களை அடிக்ககூடாது..”

தொடர்ந்து பேசிய டெலிபோன் ராஜ், “மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ என்பதை உதயநிதியே பல நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறார். படப்பிடிப்பில் அவர் நடிகர்களை அடித்து துன்புறுத்துகிறார். ஒருவரை ஏன் அப்படி அடிக்க வேண்டும்..? ஒரு படத்தை எடுக்கும் போது அதை ஜாலியாக எடுக்க வேண்டியது தானே” என்று பேசினார். அடுத்து இன்னுமொரு தகவலையும் அவர் அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். 

கர்ணன் பட காட்சி..

டெலிபோன் ராஜ், கர்ணன் படத்தில் வரும் ஒரு காட்சியை அந்த நேர்காணலில் குறிப்பிட்டார். “கர்ணன் படத்தில் போலீஸ் லாக்-அப்பில் வைத்து பலரை அடிக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும். அதன் படப்பிடிப்பின் போது உண்மையாகவே ஒரு பெண்ணிற்கு பயங்கர அடிப்பட்டது. அப்போதுதான் காட்சியை பார்க்க ரியாலிட்டியாக இருக்கும் என அப்போது மாரி செல்வராஜ் கூறினார். இதை சம்பந்தப்பட்ட பெண்ணே ஆடியோவாக பேசியது என்னிடம் உள்ளது..” என்றார். மேலும் , மாரி செல்வராஜ் தன்னுடைய சொந்த ஊரிலேயே படங்களை இயக்குவதாகவும் அவர் கூறினார். சாதிய ரீதியில் எழுதப்படும் வசனங்களை பேசக்கூடாது என ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமா கண்டிப்பாக முன்னேறாது..” என கூறியுள்ளார். 

மேலும் படிக்க | விஜய் சேதுபதியுடன் கை கோர்க்கும் விக்ரம்..! கதாநாயகி யார் தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News