அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படம் ‘போர்’! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

கைதி படத்தில் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ், தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jan 24, 2024, 07:08 PM IST
  • அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம், போர்.
  • இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
  • 'போர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.
அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படம் ‘போர்’! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்! title=

இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில்,  இருமொழிப் படமாக உருவாகியுள்ள  "போர்", படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாழ்வின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிக்கும் இந்த போஸ்டர், விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போன்று, பாதி பாதியாக பிரிந்துள்ளது. இதிலிருந்து பார்வையாளர்களை  ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லும், வித்தியாசமான சவாலைத் தருகிறது இந்த  ஃபர்ஸ்ட் லுக்.

மேலும் படிக்க | விஜய் மகனுக்காக அஜித் செய்த உதவி! அடடா..என்னா மனுஷன்யா..

"போர்",  திரைப்படம் கதை சொல்லலின் எல்லைகளைத் மாற்றியமைத்து, நமக்கு ஒரு வித்தியாசமான, பரபரப்பான அனுபவத்தை தரும் படைப்பாக இருக்கும். பார்வையாளர்கள் தங்கள் நம்பிக்கைகளை எதிர்கொள்வதற்கும், தேர்வு செய்வதற்கும் ஒரு காட்சி அழைப்பாக இந்த போஸ்டர் செயல்படுகிறது. இதிலிருந்து ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்க நீங்கள் தயாரா?. 

குல்ஷன் குமார், டி-சீரிஸ், ரூக்ஸ் மீடியா & கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர், 'போர்' திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இயக்குநர் பிஜாய் நம்பியார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் படிக்க | தங்கர் பச்சான் இயக்கிய ஆவணப்படத்தை பார்த்துள்ளீர்களா? இங்கு பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News